#OTTCorner: இந்த வாரம் OTT-ல் எந்த படங்கள், வெப்சீரியஸ் பார்க்கலாம்?

Reading Time: < 1 minutes

இந்த வாரம் (டிச. 9) OTT-ல் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Fall

Release Platform: Hotstar

Release Date: December 9

நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள “Fall” வெப்சீரியஸ் வரும் டிசம்பர் 9ம் தேதி Hotstar OTT தளத்தில் வெளியாகிறது, சந்தோஷ் பிரதாப், சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், நமிதா கிருஷ்ணமூர்த்தி, பூர்ணிமா பாக்யராஜ், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்த இந்த இணைய தொடரை சித்தார்த் ராமசாமி இயக்கியுள்ளார். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழி ஆடியோவில் வெளியாக உள்ளது,மேலும் இந்த தொடர் குறித்த விரிவான ரிவியூவை தெரிந்து கொள்ள நமது தளத்தை பின்பற்றுங்கள்.

யசோதா

Release Platform: Amazon Prime

Release Date: December 9

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்து தியேட்டரில் வெளியான யசோதா திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக உள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். வாடகை தாய் குறித்த கதைக்களத்தை த்ரில்லர் வகையில் இயக்குநர் அணுகியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ஜாக்பாட் அடித்தது குறிப்பிடதக்கது.

விட்னஸ்

Release Platform: Sony Liv

Release Date: December 9

நடிகை ரோகிணி மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ”விட்னஸ்” திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது. தூய்மை பணியாளர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை இயக்குநர் தோலுரித்து காட்டியுள்ளார். அழகம்பெருமாள், சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், சண்முகராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தீபக் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கண்ணட மொழிகளில் வெளியாக உள்ளது.

காஃபி வித் காதல்

Release Platform: Zee 5

Release Date: December 9

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த், யோகி பாபு திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்து தியேட்டரில் வெளியான “காஃபி வித் காதல்” Zee5 தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கண்ணட மொழிகளில் இந்த வாரம் டிசம்பர் 9ம் தேதி வெளியாகிறது. இவ்வளவு நட்சத்திர பட்டாளம் இருந்தம் இந்த படத்தை யாராலும் காப்பாற்ற முடியாமல் போயிவிட்டது. தியேட்டரில் பார்த்த ரசிகர்களால் உட்கார முடியலை, மெகா சீரியல் போல உள்ளது என்ற ரிவியூஸ் அதிகம் வந்தது. இந்த வார விடுமுறையில் ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: