OTT Corner: லவ் டுடே, நித்தம் ஒரு வானம், வதந்தி, மிரள், பிரின்ஸ், OTT ரிலீஸ் அப்டேட்!

Reading Time: < 1 minutes

கடந்த வாரம் OTT- ல் நிறைய தமிழ் திரைப்படங்கள் ரிலீசானது, அதன் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லவ் டுடே

Release Platform: Netflix

Release Date: December 2

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட “லவ் டுடே” திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT-ல் வெளியாகி உள்ளது. ஒருவருக்கொருவர் புரிந்து வைத்துக் கொள்வதாக நம்பும் காதலனும் காதலியும் தங்களது செல்போனை சில நாள்களுக்கு மாற்றிக் கொண்டால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை.

நித்தம் ஒரு வானம்

Release Platform: Netflix

Release Date: December 2

அசோக் செல்வன், ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகியோர் நடிப்பில் வெளியான ”நித்தம் ஒரு வானம்” நெட்பிளிக்ஸ் OTT-ல் வெளியாகி உள்ளது. பயணங்களின் மூலம் நாயகன் வாழ்க்கையில் மாற்றம் அடைவது என்ற பழகிய களம்தான் என்றாலும் அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக்கின் திரைக்கதையும் மேக்கிங்கும் புத்துணர்ச்சியைத் தருகின்றன. பல இடங்களில் ரசனைக்கு விருந்தளிக்கும் காட்சிகளால் ‘ஃபீல் குட்’ படம் பார்த்த திருப்திக் கிடைக்கிறது.

மிரள்

Release Platform: Aha

Release Date: December 2

பரத், வாணி போஜன் நடிப்பில் ஸ்லாஷர் த்ரில்லர் திரைப்படமாக வெளியான “மிரள்” ஆஹா OTT- ல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் முதல் ஒரு மணி நேரம் பார்த்த கதைகளம் முற்றிலும் நம்ப முடியாத நிகழ்வுகளால் கிளைமேக்ஸுல் மாற்றப்படுவது சில பார்வையாளர்களால் நெகட்டிவாக கூறப்பட்டது.

வதந்தி

Release Platform: Amazon Prime

Release Date: December 2

புஸ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஜோ ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து மர்டர் மிஸ்டிரி த்ரில்லர் வெப் சீரியாஸாக அமேசான் பிரைமில் “வதந்தி” வெளியாகி உள்ளது. வெலோனி என்ற பெண் மரணம் அதற்கு காரணம் யார்? பிண்ணனி என்ன? என்ற கேள்விகளுடன் நகரும் கதைக்களத்தை கிரிப்பிங்கான காட்சிகள் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மேலும் வலுவாக்கியுள்ளது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: