சீன நிறுவனமான Oppo இந்தியாவில் Oppo A78 5G மாடல் மாடலை ஜனவரி 16ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதன் அம்சங்கள் மற்றும் மற்ற விவரங்களை பார்க்கலாம்.

Oppo நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் லாஞ்ச் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் மலேசியாவில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் உள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த மாடல் 6.56- இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே உடன் 90Hz ரெஃப்ரஸ் ரேட் கொண்டிருக்கும். 5000 மெஹா ஹர்ட்ஸ் பேட்டரியுடன் 33W சூப்பர்VOOC பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
கடந்த வியாழக்கிழமை Oppo நிறுவனம் இந்தியாவில் இந்த மாடல் வரும் ஜனவரி 16ம் தேதி திங்கள் கிழமை வெளிவரும் என்று ட்வீட் செய்திருந்தது. இன்னும் இதன் சரியான விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை, ஆனால் இதன் விலை சுமார் ரூ.19,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் கேமரா சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைப் கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் ப்ரண்ட் கேமரா உள்ளது. இரண்டு சென்சார்களும் முழு எச்டி வீடியோக்களை 30 எஃப்.பி.எஸ் வேகத்தில் பதிவு செய்யும் திறன் கொண்டவை.
Oppo சமீபத்தில் அதன் ரெனோ 8 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிசனை வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது. பிரபல தொலைக்காட்சி தொடரான ‘ஹவுஸ் ஆஃப் டிராகன்’ ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த மாடல் “டிராகன் லிமிடெட் எடிஷன் செட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடலை வாங்கியவர்களுக்கு அந்த தொடரை விளம்பரபடுத்தும் விதமாக போன்கேஷ், கீசெயின், போன் கோல்டர் ஆகியவற்றை வழங்கியிருந்தார்கள்.