மீண்டு(ம்) வரும் ஒன்பிளஸ்!

Reading Time: 2 minutes

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில் தன்னுடைய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த நிகழ்ச்சி ஒன்பிளஸ் ரசிகர்களை நிச்சயம் சந்தோஷப்படுத்தும், ஏனென்றால் 2019க்கு பிறகு அதாவது கோவிட் பாதிப்புக்கு பிறகு இந்த நிறுவனம் நடத்தும் முதல் ஆஃலைன் நிகழ்ச்சி அப்டீங்கறதுனால ஒன்பிளஸ் பிராண்டோட லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் ரிலீஸ் ஆக இருக்கு.

என்னென்ன எதிர்பார்க்கலாம்?

கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒன்பிளஸ் 11 5G ஆனது, இந்த பிராண்டின் வேகமான, மென்மையான அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வசதிக்காக மக்கள் அதிகம் விரும்பும் அலெர்ட் ஸ்லைடரையும் ஒன்பிளஸ் மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

கேமரா

அலெர்ட் ஸ்லைடரை தவிர, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா, மேம்படுத்தப்பட்ட புகைப்பட வெளியீட்டிற்காக ஹாசல்ப்ளாட் ட்யூனிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா அமைப்பிற்காக ஒன்பிளஸ் நிறுவனம், பிரபல ஸ்வீடிஷ் கேமரா மற்றும் இமேஜ் டெக்னாலஜி நிறுவனமான ஹாசல்ப்ளாட் உடன் இணைந்து செயல்பட்டுள்ளது. ஏற்கனவே ஈர்க்கக்கூடிய கேமரா அமைப்பை கொண்டுள்ள ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இதுவொரு எக்ஸ்ட்ரா அட்வான்டேஜ்.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை முழுமையாக்குவது, அதன் புத்தம் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆகும், இது ஸ்டீரியோ குவாலிட்டி ஆடியோ அனுபவத்தை மிகவும் தெளிவாக வழங்கும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஆடியோ புராடக்ட்.

இந்த இயர்பட்ஸ் ஒரு நேர்த்தியான மற்றும் கச்சிதமான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீண்ட நேரத்திற்கு மிகவும் வசதியாக அணிந்துகொள்ள முடியும். நீர் மற்றும் வியர்வையை எதிர்க்கும் திறனையும் கொண்டுள்ளதால், உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புற நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இதுல வயர்லெஸ் சார்ஜிங்கும் இருக்கு.

இந்த ரெண்டு புராடக்டும் எப்படி இருக்க போதுனு ஒன்ப்ளஸ் ரசிகர்கள் ரொம்ப ஆர்வமாக காத்துக்கிட்டு இருக்காங்க.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: