சன்னி லியோன் கதாநாயகியாக நடித்து வெளியாகியுள்ள “ஓ மை கோஸ்ட்” படம் எப்ப்டி இருக்கு என்று பார்க்கலாம்.

இயக்குநர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன், யோகி பாபு, சதீஸ், ரமேஷ் திலக், ஜி.பி.முத்து நடிப்பில் வெளியாகியுள்ளது “ஓ மை கோஸ்ட்’. சன்னி லியோன் பேய் படம் என்றதும் இளைஞர்கள் மகிழ்ச்சியில் குத்தித்தனர். இன்று வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
இந்த படத்தின் கதை காலம் காலமாக வெளியான அதே பேய் கதைதான். படத்தின் கதை தொடக்கம் முதலே அது போக்கிற்கு செல்கிறது. இந்த படத்தில் ப்ளஸ், மைனஸ் என்று பார்ப்பதற்கு முன்னால் இதில் ப்ளஸ் இருக்கா என்று யோசிக்க வைக்கிறது. இது என்ன கதை இதை எதற்கு படமாக எடுத்தார்கள் என தியேட்டரில் இருந்த அனைவரும் முழிப்பதை பார்க்க முடிந்தது.

சன்னி லியோனுக்காக வந்த ரசிகர்களையாவது திருப்தி படுத்தியதாக என்று கேட்டால் அதுவும் இல்லை. தேவையில்லாமல் சன்னி லியோனை நடிக்க வைத்ததுக்காக இரண்டு கிளாமர் பாடல் அதுவும் ரசிக்கும்படி இல்லை. இது காமெடி ஜானரா, ஹாரர் அல்லது திரில்லரா இல்லை என்ன ஜானர் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு படம். முடிந்தால் நீங்கள் பார்த்துவிட்டு கமெண்டில் சொல்லுங்கள்.
யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக் தங்களது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சன்னி லியோனுக்கு லிப் சிங்கும் சரியில்லை,நடிப்பும் அவ்வளவாக ஒட்டவில்லை. பிரேம்கள் அவரது முகத்தை தவிர அனைத்து இடங்களையும் கவர் செய்துள்ளது. இந்த வாரம் நிறைய படங்கள் ரிலீசாகி உள்ளது.
இந்த படம் பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் பார்க்கலாம்.
இணைய தலைமுறை ரேட்டிங்: 1.5/5