மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 தமிழ் படங்கள்

Reading Time: 3 minutes

சில நல்ல திரைப்படங்களை நாம் பார்க்காமல் தவற விட்டிருப்போம். பெரும்பாலானோர் பார்க்க தவறிய சிறந்த 5 தமிழ் படங்கள் பட்டியல் மற்றும் எந்த OTT தளத்தில் உள்ளதில் என்பதை பார்க்கலாம்.

5. பாரம் (Baaram)

Available in: Amazon Prime Video

இந்த பட்டியலில் 5வது இடத்தில், 2020 ம் ஆண்டு பிரியா கிருஸ்ணசாமி இயக்கத்தில் வெளியான “பாரம்”. தென் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த ”தலைக்கு ஊத்தல்” என்ற வழக்கத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்திருப்பார்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் மிகவும் வயதானவர்கள் தலையில் தொடர்ந்து குளிர் நீரை ஊற்றி அவர்களுக்கு இளநீர் கொடுத்து அவர்களை இறக்கும் நிலைக்கு கொண்டு செல்வதே தலைக்கு ஊத்தல். இந்த சம்பர்தாயம் குறித்து பேசுவதே இந்த திரைப்படம். இந்த படம் சொல்ல வந்த கருத்தை மிகவும் தெளிவாக சொல்லியிருப்பார்கள்.

4. இஃக்லூ (Igloo)

Available in: Zee5

2019ம் ஆண்டு பரத் மோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இஃக்லூ. கதையின் நாயகனுக்கு இரட்டை பெண் குழந்தைகள். அம்மா இல்லாமல் அப்பாவின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள். விபத்தில் ஒரு குழந்தை கோமாவில் நிலைக்கு சென்று விட, அவள் அடிக்கடி கேட்கும் அம்மா பற்றிய கதையை சொல்கிறார் ஹீரோ. என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத அழகான ரொமாண்டிக் டிராமா இந்த படம். இந்த படம் பார்த்து முடித்த பின் மனதை விட்டு கண்டிப்பாக நீங்காமல் இருக்கும்.

3. மெஹந்தி சர்க்கஸ் (Mehandi circus)

Available in: Netflix

2019ம் ஆண்டு சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் ரொமாண்டிக் டிராமாவாக வெளியான ”மெஹந்தி சர்க்கஸ்”. சாதி மேல் மிகவும் நம்பிக்கை கொண்டவரின் மகனுக்கும், ஊர் ஊராக சர்க்கஸ் போடுபவரின் மகளுக்கும் இடையே மலரும் காதல். என்ன கடைசியில் நடந்தது என்பதே கதை. நம் மனதை விட்டு நீங்காத காதல் படம் இது. இந்த படம் தியேட்டரில் பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும் இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.

2. நெடுநல்வாடை (Nedunelvadai)

Available in: YouTube Movies(Payment)

2019ம் ஆண்டு செல்வ கண்ணன் இயக்கத்தில் வெளியான ’நெடுநல்வாடை’. ஹீரோவை முன்னேற்ற கஷ்டப்படும் தாத்தாவின் பாசம், மறுபுறம் காதலியின் பாசம். இறுதியில் யார் ஜெயித்தது என்பதே மீதிக்கதை. இந்த படத்தில் தாத்தாவாக நடித்திருந்த ’பூ’ ராம் அவர்கள் நடிப்பை சுட்டி காட்டியே ஆக வேண்டும். மற்ற கதாபாத்திரங்களும் மிரட்டியிருப்பார்கள். இப்படி பட்ட படம் தியேட்டரில் பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும். நீங்கள் மிஸ் பண்ணாம பாருங்க.

1. டுலெட் (Tolet)

Available in: Amazon Prime Video

இந்த பட்டியலில் முதலிடத்தில் 2019ம் ஆண்டு செழியன் இயக்கத்தில் வெளியான ’டுலெட்’. நடுத்தர வர்க்கத்தை சார்ந்த எழுத்தாளர். அவர் குடியிருந்த வீட்டை மாற்ற தன் மனைவி, குழந்தையுடன் தேடி அலைகிறார். அங்கு அவர் சந்திக்கும் கஷ்டங்களே இந்த படம். நம் அனைவரும் வாழ்க்கையில் ரிலேட் செய்து கொள்ள முடியும். இந்த படத்தில் நிறைய காட்சி அமைப்புகள் உங்கள் மனதில் ஒரு விதமான வலியை கடத்தும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படங்களையும் மிஸ் பண்ணாம பாருங்க, உங்களுக்கு பிடித்த படங்களின் பெயரை கமெண்டில் சொல்லலாம்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: