நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாஸ்வேர்டை பகிர முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் சிஇஓ தகவல்.

வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் இந்த ஆண்டு பாஸ்வேர்ட் பகிர்வதை நிறுத்துவது, மற்றும் விளம்பரங்கள் அறிமுகம் குறித்தும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில், புதிய இணை தலைமை நிர்வாக அதிகாரிகள் (சிஇஓ) கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சரண்டோஸ் ஆகியோர் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் பாஸ்வேர்ட் பகிர்வு முடிவு குறித்த கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளனர்.
இப்பொழுது இருக்கும் நெட்ப்ளிக்ஸ் பயனர்கள் எக்ஸ்பீரியன்ஸில் எந்த மாற்றமும் செய்யப்படாது. மேலும் சப்ஸ்கிரைப் செய்யாத பயனர்கள் அதில் உள்ள கண்டெண்டுகளுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தினால் உலகம் முழுவதும் சில பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், இந்தியா போன்ற நாடுகளில் அதிக கவனம் செலுத்தி சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையை 15 முதல் 20 மில்லியன் வரை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு வாரமும் ‘கிளாஸ் ஆனியன்’ போன்ற கண்டெண்டுகளை வழங்குவதன் மூலம் பயனர்கள் தங்கள் வசம் வருவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
நெட்ப்ளிக்ஸ் நவம்பரில் குறைந்த விலை விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 12 நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
2022 டிசம்பர் காலாண்டில் நெட்ப்ளிக்ஸிற்கான கட்டண சேர்க்கை உலகளவில் 7.7 மில்லியனாக இருந்தது, இது 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 8.3 மில்லியனாக இருந்தது. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், நெட்பிக்ஸ் டிசம்பர் காலாண்டில் 1.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை சேர்த்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் சேர்க்கப்பட்ட 2.58 மில்லியனை விடக் குறைவு.
இருப்பினும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்ட் ஷேர் செய்வதில் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளது, இது சில கூடுதல் சந்தாதாரர்களைச் சேர்க்கக்கூடும் என்று நம்புகின்றனர்.