கணக்கு இல்லாமல் ஒருநாள் கூட நம் வாழ்வு நகராது.. எங்கும் கணக்கு எதிலும் கணக்கு.. டிசம்பர் 22 தேசிய கணித தினம் இன்று!

கணிதம் என்றாலே பலரும் சிக்கலாக தான் இருக்கும் மற்ற பாடங்களில் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட கணித பாடத்தில் சற்றே திணறுவார்கள். கணிதத்திற்கு மிக முக்கியமான பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்தது இந்தியா. அதை கண்டுபிடித்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜம்.
கணித மேதை ராமானுஜம் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 22 தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீனிவாச ராமானுஜம், என்னேரமும் கணிதத்திற்கான விடைகளை தேடிக் கொண்டே இருப்பாராம். அவரை பள்ளி வகுப்பறைகளில் பார்ப்பது அரிது தான். விடை தெரியாத பல கணக்குகளுக்கு உறங்கும்போது கனவில் விடையை கண்டு பிடிப்பாராம். அந்த அளவிற்கு கணிதம் மீது ஆர்வமும் விருப்பமும் கொண்டவர். ராமானுஜம் மூன்று வயது வரை பேசும் திறன் இல்லாமல் இருந்திருக்கிறார் பள்ளியில் சேர்ந்த பிறகுதான் பேசத் தொடங்கினார்.
இவரது நண்பரான சாரங்கபாணி கணித பாடத்தில், இவரைவிட ஒரு மதிப்பெண் அதிகம் வாங்கியதால் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாராம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் கற்றுக் கொடுக்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்.
கல்லூரி படிக்கும் போது, ஆங்கில பாடத்தில் 3 முறை தோல்வியுற்றார். காரணம் கணிதத்தின் மீது மட்டுமே அவர் ஆர்வம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அவர் அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது. கணித சூத்திரங்களை தீர்ப்பதற்கு காகிதம் வாங்க கூட முடியாத நிலையில் இருந்தார் ராமானுஜம். இதனால் எழுதிய காகிதங்களில் ஓரங்களில் மிகவும் கடினமான கணித சூத்திரங்களை எழுதி வைத்திருந்தார்.

திருமணமான பிறகு பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்,
20 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலையை செய்துகொண்டே கணிதத்துறை குறித்த சிறப்பு கட்டுரையை வெளியிட்டார். இந்த குறிப்புகளை சென்னை துறைமுக பொறுப்பு தலைவரான ஸ்ப்ரிஸ் எனும் ஆங்கிலேயர் பார்த்துவிட்டு வியந்து போனார்.
உடனடியாக அவற்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி உள்ளார். அவற்றை பார்த்த பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி உடனடியாக இங்கிலாந்து வருமாறு இராமானுஜனுக்கு அழைப்பு விடுத்தார். 1914-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்திற்கு சென்றார் ராமானுஜம்.
அங்கு பல கணித மேதைகளுடன் உரையாடினார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். இதன் மூலம் தமிழகத்தை தலைநிமிரச் செய்தார்.
3000-த்திற்கும் மேற்பட்ட கணித தேற்றங்களை எழுதி, கணிதத்துறையில் யாரும் எட்ட முடியாத, மிகப்பெரும் சாதனைகளை புரிந்த மாமேதைக்கு ஆயுட்காலத்தை குறைவாக எழுதியது இயற்கை. 32 வயதிற்குள் மிகப்பெரிய கணித அறிஞர்களையே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு பல சாதனைகளை புரிந்துவிட்டு, நோயுடன் போராடி இம்மண்ணுலகை விட்டு விடைப்பெற்று சென்றார்.
அவர் அன்று கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான் இன்றைய ஆண்ராய்டு யுகத்தின் துறைகளில் பயன்படுகிறது. ஜெர்மன் மற்றும் சுவீடன் நாடுகள், ஆண்டுதோறும் ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாநாட்டை நடத்தி அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது.