எம்.வி.கங்கா விலாஸ் கப்பலில் பயணம் செய்ய ரெடியா?

mv-ganga-vilas
Reading Time: < 1 minutes

உலகின் மிக நீளமான நதி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ் கப்பல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

MV Ganga Vilas Cruise: All details to know

எம்.வி.கங்கா விலாஸ் கப்பல், உலகின் மிக நீளமான நதி கப்பலாகும். 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருந்த இந்த கங்கா விலாஸ் கப்பல் கொரோனா பரவல் காரணமாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் என்ன ஸ்பெஷல்

கங்கா விலாஸ் கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து, அசாமின் திப்ருகர் சென்றடையும். இந்த கப்பல், 27 இந்திய நதிகள் வழியாக பயணிக்கும். 3 தளங்கள் கொண்ட இந்த கப்பலில் 18 அறைகள் உள்ளது. இந்த கப்பலின் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கப்பலில் எங்கெல்லாம் செல்லலாம்?

முக்கிய நதிக்கரைகள், தேசிய பூங்காக்கள், பாரம்பரிய இடங்கள், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம்.

இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் கலை, கலாச்சாரம், வரலாறு. ஆன்மீக சுற்றுலா தலங்களையும் பயணிகள் கண்டுகளிக்கலாம். நதி வழியிலான சுற்றுலாவை மேம்படுத்த அரசு எடுத்துள்ள புதிய முயற்சி இது.

இந்த சொகுசு கப்பல் திட்டம் சுற்றுலாவை பெரிதும் ஊக்குவிக்கும், சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: