ஹைதராபாத் கடைசி நிஜாம் மரணம்

Hyderabad's last nizam
Reading Time: < 1 minutes

ஹைதராபாத் கடைசி நிஜாம் முக்காரம் ஜா (mukarram jah bahadur) மரணம். 1000 கோடி மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தியவர்.

mukarram jah bahadur

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் வசித்து வந்தவர் மீர் பர்காத் அலி கான். முக்காராம் ஜா என பிரபல பெயரால் அறியப்படுபவர். ஹைதராபாத்தின் எட்டாவது நிஜாமாக இருந்த இவர் வியாழக்கிழமை துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் காலமானார்.

இவரது ஜாவின் தாத்தா மிர் ஒஸ்மான் அலி கான் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமாக அந்த காலத்தில் உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரராகக் இருந்தவர். அவருடைய பெயரில் இருந்த சொத்து மதிப்பு 236 பில்லியன் டாலர் ஆகும்.

இறுதி அஞ்சலி

இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் காலமானார். 80 வயது நெருங்கிய அவரது உடல் இன்று மாலை ஐதராபாத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அவர் தனது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினரிடம் முன்பே விருப்பம் தெரிவித்து உள்ளார். அதன்படி, மீர் பர்க்கத்தின் குடும்பத்தினர் அவரது உடலுடன் ஐதராபாத்துக்கு வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து மாலை 5 மணியளவில் சவுமஹல்லா அரண்மனைக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து, நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்படும். பின்னர், மெக்கா மசூதியில் அவரது தந்தை ஆசம் ஜாவின் கல்லறை அருகே அவரது உடல் அடக்கம் மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1000 கோடி மதிப்புள்ள வைரம்

முக்காராம் சில்வர் கோஸ்ட் த்ரோன் கார் உட்பட பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தார். ரூ. 1,000 கோடி மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வையிட்டாக பயன்படுத்தி வந்துள்ளார். 40 கிராம் எடை கொண்ட இந்த வைரத்தை 1995ஆம் ஆண்டு நிஜாம் அறக்கட்டளையிடம் இருந்து 13 மில்லியனுக்கு இந்திய அரசு வாங்கியது. இந்த வைரம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இப்போது உள்ளது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: