Netflix OTT தளத்தில் நிறைய ரசிக்கும் படியான வெப் சீரியஸ் உள்ளது. ஆங்கில வெப் சீரியஸ் இந்தி மொழிகளில் நிறைய டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. ஒரு சில வெப் சீரியஸ் மட்டுமே தமிழ் மொழியிலும் வெளியாகி உள்ளது. அதுகுறித்து கீழே காணலாம்.

Elite

IMDB Rating: 7.3/10
Darío Madrona · Carlos Montero இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்பட்ட ஸ்பானிஷ் வெப் சீரியஸ் “Elite”. Money Heist சீரியஸில் நடித்துள்ள டென்வர், ரியோ ஆகியோர் நடித்துள்ளனர். ஹை ஸ்கூல் டிராமாவாக வெளியாகி உள்ள இந்த வெப் சீரியஸ் தமிழ் மொழி ஆடியோவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது. மொத்தம் 6 சீசன்களை கொண்ட இந்த தொடர் IMDB ரேட்டிங்கில் 7.3 மதிப்பை பெற்றுள்ளது.
Money Heist

IMDB Rating: 8.2/10
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரிய அதிர்வை லாக் டவுனில் ஏற்படுத்திய வெப் சீரியஸ் Money Heist. இதில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் உண்டு, குறிப்பாக Professor ஆக நடித்திருந்த ஆல்வாரோ மோர்டிக்கு மிகவும் அதிக ரசிகர்கள். ஸ்பானிஸ் ஹைஸ்ட் திரில்லராக வெளிவந்த இந்த வெப் சீரியஸ் மொத்தம் 5 சீசன்களை கொண்டிருக்கும், தமிழ் டப்பிங்கிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது.
Stranger Things

IMDB Rating: 8.7/10
டஃபர் பிரதர்ஸ் இயக்கத்தில் அமெரிக்கன் சயின்ஸ் ஃபிக்சன் ஹாரர் டிராமாவாக வெளிவந்தது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். ஹாவ்கின்ஸ் என்ற இடத்தில் நடக்கும் அமானுஷ்யங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்சன் வெப்சீரியஸ். மொத்தம் 4 சீசனாக வெளியாகியுள்ள இந்த வெப் சீரியஸ் தமிழ் டப்பிங்கிலும் உள்ளது, 5வது பாகம் விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Squid Game

IMDB Rating: 8/10
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரியஸ் “Squid Game”. வந்த சில நாட்களிலேயே இந்த தொடர் மிகவும் பிரபலமானது. பணப்பற்றாக்குறையில் தவிக்கும் நூறு பேரை தேர்ந்தெடுத்து குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்க வைக்கின்றனர். உயிரை பணையம் வைக்கும் போட்டி என்பது அவர்களுக்கு பின்னர் தான் புரிகிறது. கடைசியில் யார் தப்பித்தார்கள் என்பதே மீதி கதை. சீசன் 1 மட்டும் இப்போது ரிலீசாகி உள்ளது. நெட்பிளிக்ஸில் தமிழ் மொழியிலும் இந்த வெப் சீரியஸ் உள்ளது.
Wednesday

IMDB Rating: 8.3/10
Netflix Ottயில் ஹாரர் காமெடி வெப்சீரியஸாக வெளியாகியுள்ளது “Wednesday”. சார்லஸ் ஆடம்ஸ் எழுதிய வெட்னஸ்டே ஆடம்ஸ் என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரியஸ். வெட்னஸ்டே ஆடம்ஸ் தனது பள்ளியை சுற்றி நடக்கும் மான்ஸ்டர் மிஸ்டரியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. இந்த வெப்சீரியஸ் ரைட்டிங்கில் செமயாக ஸ்கோர் செய்திருப்பார்கள். அனைத்து எபிஷோடுகளும் மிகவும் த்ரில்லாக இருக்கும். மிஸ் பண்ணாமல் பாருங்க.