இன்றைய காலக்கட்டத்தில் சின்ன பெட்டி கடை தொடங்கி, பெரிய வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை வந்துவிட்டது.
பேடிஎம், கூகுள் பே, போன் பே, வாட்ஸ்அப் பே என பல டிஜிட்டல் முறை பரிவர்த்தனை அப்ளிகேஷன் மூலமா ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் பணப்பரிமாற்றம் நடக்கிறது.

காஷ்மீர் முதல் கடைக்கோடி மக்கள் வரை ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை எப்போதும் பயன்படுத்துவதால், மக்கள் மேலும் ஈசியாக உபயோக்கிக்கும் வகையில் இந்த ஆப் கம்பெணிகள் தொடர்ந்து முக்கிய அம்சங்களை கொண்ட அப்டேட்களையும் வெளியிடுகின்றனர்.
அந்த வகையில், யுபிஐ மூலமும், கூகுள் பே, போன் பே மூலமும் தினந்தோறும் பரிவர்த்தனை செய்வோருக்கு இந்த அம்சங்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும். ஒருத்தரிடமிருந்து QR Code அனுப்பி பணத்தை வேறு எப்படியெல்லாம் பெறலாம், போன் நம்பரே கொடுக்காமல் எப்படி பணம் பெறுவது என்பதை தற்போது பார்க்கலாம்.

QR Code மூலம் கூகுள் பே-ல் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். GPay Profile-ல் QR Code-க்குள் சென்றால் அங்கு வலப்புறத்தின் மேலே உள்ள ஐகானில் Set amount என இருக்கும். அதில் நாம் செட் செய்ய வேண்டிய தொகையை டைப் செய்து, அதற்கான QR Code மட்டும் அனுப்ப முடியும். இந்த முறையை பயன்படுத்தி, தவறுதலாக கூடுதல் பணம் அனுப்புவதை தடுக்கலாம்.
அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளிலும் எத்தனை அக்கவுன்ட் வைத்திருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் UPI ID இருக்கும். இந்த UPI ID-ஐ வைத்து பேமெண்ட் அனுப்பச் சொல்லலாம். இந்த முறையை பயன்படுத்தி போன் நம்பர் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது.
True caller பயன்படுத்தாதவர்கள் தங்களுக்கு யார் போன் செய்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள, நம்பரை காப்பி செய்து கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளில் பேஸ்ட் செய்து யார் அந்த நபர் என்பதை ஃபோட்டோவோடு தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த நபர் கூகுள் பே போன்ற செயலிகளில் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அனைத்து எண்களுக்கும் சாத்தியமில்லை.