இன்னைக்கு ஸ்மார்ட்போன் இல்லாத ஆள் இல்லை… அதே மாதிரி என் போன்ல சார்ஜ் நிக்கலனு சொல்லாத ஆளும் இல்லை.. அந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் சூடாக காரணம்
நீங்கள் பயன்படுத்துவது எந்த ஸ்மார்ட்போனோ அதற்கு ஏற்ற சார்ஜரை தான் உங்கள் போனில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போனை சூடாகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி போன் சூடாக இருந்தால் அதற்கு காரணம் பேட்டரிதான். அடிக்கடி ரீஸ்டார்ட் செய்யவும் ஸ்மார்ட்போனின் தகுதிக்கு மீறிய அம்சங்களை அதில் தொடர்ந்து பயன்படுத்தினால் சூடாகும். பட்ஜெட்டில் போன் வாங்கிவிட்டு ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனில் உபயோகிக்கும் அம்சங்களை பயன்படுத்தினால் இந்த சிக்கல் வரும்.
சார்ஜ் குறைவதற்கு காரணம்
ஸ்மார்ட்போனை பயன்படுத்தவே இல்லை, காலை சார்ஜ் போட்டு அலுவலகம் செல்கிறேன் மாலை பார்த்தால் பேட்டரி ஆயுள் அடிமட்டத்துக்கு குறைந்துவிடும். இதற்கும் காரணம் பல செயலிகள் ஸ்மார்ட்போனின் Background இல் ரன் ஆகிக் கொண்டிருப்பது தான். முதலில் உங்கள் மொபைலில் தேவையில்லாமல் இருக்கும் ஆப்ஸ்களை டெலிட் செய்துக் கொள்ளுங்கள்.
மொபைல் வெடிப்பதற்கான காரணம்
மொபைல் வெடிப்பதற்கான காரணம் என்றால் அது மொபைலில் இருக்கும் பேட்டரியால் மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கும் வீக் ஆவதற்கும் பிரதான காரணங்களில் சார்ஜரும் ஒன்று. ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும்.
எனவே வேறு ஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது. சார்ஜர் என்பது மிக முக்கியம் குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது