நெட்ப்ளிக்ஸ் OTTயில் வெளியாகியுள்ள ‘மிஷன் மஜ்னு’ படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

கதை
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்கு Raw ஏஜெண்டாக செல்லும் ஹீரோ. இந்தியாவை எதிர்க்க பாகிஸ்தான் ரகசியமாக தயாரிக்கும் நியூக்ளியர் வெப்பனை கண்டுபிடித்து இந்தியாவிற்கு உளவு சொல்வதற்காக அங்கு செல்கிறார். அங்கு பாகிஸ்தானில் பார்வையற்ற பெண் ராஷ்மிகா மீது காதல் வயப்படுகிறார். கடைசியில் என்ன நடந்தது? மிஷனை ஹீரோ வெற்றிகரமாக முடித்தாரா? அல்லது அந்த பெண்ணை கரம் பிடித்தாரா என்பதே மீதி கதை.
விமர்சனம்
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா, கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. இந்திரா காந்தி, மொராஜி தேசாய் போன்ற கதாபாத்திரங்களை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளனர்.
பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை படத்தில் ப்ளஸ். கேமரா , எடிட்டிங் உட்பட அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும் படத்தில் சரியாக பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். படம் ஆரம்பிக்கும் போது த்ரில்லர் பாணியில் ஆரமித்து பின்னர் ரொமாண்டிக் டிராமாவாக மாறுவது படத்தின் வேகத்தை குறைக்கிறது.
கடைசி அரை மணி நேரம் படத்தில் மிகவும் அழுத்தமான காட்சிகள் இருந்தது. அந்த இடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா இன்னும் அழுத்தமான நடிப்பின் மூலம் அந்த காட்சியை மெருகேத்திருக்கலாம் என்று தோன்றியது. ராஷ்மிகா மந்தனாவிற்கு காட்சிகள் அதிகமாக இல்லை என்றாலும் அவர் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.
இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி-யில் தமிழ் டப்பிங்குடன் உள்ளது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு நல்ல ரொமாண்டிக் டிராமா இந்த ’மிஷன் மஜ்னு’.
இணைய தலைமுறை ரேட்டிங்: 2.5/5