மார்கழி திருவாதிரை விரதம் 2023

Reading Time: 2 minutes

மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் சிறப்பு என்ன? தேதி, வழிபாட்டு முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிவ பெருமானுக்கு வரும் முக்கிய நாள் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் நடக்கும் அபிஷேகம். இதற்கு ஆருத்ரா அபிஷேகம் என்று பெயர். நடராஜ பெருமானுக்கு நடைபெற கூடிய 6 அபிஷேகங்கள் என்று குறிப்பிட்டு சொல்லலாம். அதில் முக்கியமான அபிஷேகம் இந்த ஆதிரை திருநாளில் நடைபெறக்கூடிய அபிஷேகம். ஆண்டில் மொத்தம் 6 அபிஷேகம் நடக்கும். அதுகுறித்து பார்க்கலாம்.

நடராஜருக்கு நடைபெறும் 6 அபிஷேகங்கள்

சித்திரை – திருவோணம்

ஆணி – உத்திரம்

ஆவணி – சதுர்த்தசி

புரட்டாசி – சதுர்த்தசி

மார்கழி – திருவாதிரை

மாசி – சதுர்த்தசி

இந்த 6 அபிஷேகங்களில் மிகவும் முக்கியமான விஷேசம் நிறைந்த அபிஷேகம் திருவாதிரை மாதத்தில் நடைபெறும் அபிஷேகம் ஆகும்.

திருவாதிரை வரலாறு

திருவாதிரை நாளுக்கு அதிக வரலாறு உண்டு. அதில் ஒன்று சேந்தனாரின் வரலாறு. ஒரு ஏழையான அவரிடன் சிவ பெருமான் சென்று உணவு கேட்க, தன்னிடத்தில் இருந்ததை வைத்து அவருக்கு களி செய்து கொடுக்கிறார் சேந்தனார். தனக்கு இவர்தான் களி செய்து கொடுத்து பசியை போக்கினார் என்பதை உலகறிய செய்தார் நடராஜர். மேலும் தன்னுடைய திருத்தேர் நகர சேந்தனார் பாட வேண்டும் என்று உலகறிய கூறிய, அவர் பல்லாண்டு பாடி தேரோட்டத்தை நடத்தினார் என்பது வரலாறு.

திருவாதிரை விரதம்

திருமணமான பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அவர்கள் கணவருக்கு ஆயூள் நீடிக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் பெண்கள் தங்கள் தாலிகளை மாற்றி நடராஜரை வழிபடுவர். இதற்கு மாங்கல்யா நேன்பு அல்லது தாலி நோன்பு என்றும் பெயர்கள் உண்டு

வெற்றி தரும் சங்கடஹர சதுர்த்தி 2023 தேதிகள்

விநாயகருக்கு மிகவும் சிறப்பான நாளான சங்கடஹர சதுர்த்தி 2023ம் ஆண்டில் நெதெந்த தேதிகளில் வருகிறது என்பதை பார்க்க கிளிக் செய்யுங்கள்.

வழிபாட்டு முறை

பகல் முடிந்து இரவு வந்ததும் நோன்பு ஆரம்பமாகும். மஞ்சளில் விநாயகர் செய்து அருகம்புல் சாற்றி விபூதி சந்தனம் குங்குமம் இட்டு விநாயகர் முன், ஒரு தட்டில் மாங்கல்ய சரடுகள் வைக்கப்படும். விநாயகருக்கு தீபாராதனை காட்டி வழிபடுவர்.

நோன்பை நிறைவு செய்ய விநாயகருக்கு 18 வகை காய்கறிகள் சமைத்து,திருவாதிரை களி,பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உட்கழுத்துசரடு எனும் மாங்கல்ய நூலணிகளை அணிந்து நோன்பு நிறைவு பெறும்.

இந்த நாளில் வெள்ளிக்கிழமை தாலி சரடு மாற்றலாம். சூரிய உதயத்திற்கு முன்பாகவே தாலி சரடு மாற்றிக்கொள்ளலாம். காலையில் தாலி சரடு மாற்றும் போதும் கணவர் கையினால் தாலி சரடு கட்டிக்கொண்டு ஆசி வாங்கலாம். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த நோன்பிருந்து இறைவனை வழிபடலாம்.

மார்கழி திருவாதிரை 2023/ ஆருத்ரா தரிசனம் 2023

இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம். இந்த திருவாதிரை நோன்பை கடைபிடித்து சிவ பெருமானின் அருளை பெறுங்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d