M3GAN ஹாலிவுட் மூவி ரிவ்யூ

megan movie
Reading Time: < 1 minute

Gerard Johnstone இயக்கத்தில் அமெரிக்கன் சயின்ஸ் பிக்சன் ஹாரர் திரைப்படமாக வெளிவந்துள்ள M3GAN படம் எப்படி இருக்கு என்று இந்த ரிவியூவில் பார்க்கலாம்.

megan movie

கதை

படத்தின் கதாநாயகி ஜெம்மா (அலிசன் வில்லியம்ஸ்), ஒரு ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்ப டாய்ஸ் உருவாக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவர் தன் தந்தை, தாயை விபத்தில் இழந்த குழந்தையை பாதுகாத்து வருகிறார். M3GAN (மாடல் 3 ஜெனரேட்டிவ் ஆண்ட்ராய்ட்) என்ற ரோபோட்டை உருவாக்கி அதனை சோதிக்க அந்த குழந்தையுடன் விடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

விமர்சனம்

இந்த படம் இயக்குநர் ஜேம்ஸ் வானின் கதை. இந்த படத்தின் ரைட்டிங் மிகவும் சரியாக இருக்கும். அதுவே படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். ஜேம்ஸ் வான் மற்றும் அகேலா கூப்பர் இணைந்து இந்த கதையை எழுதியுள்ளனர். இந்த படத்தை இயக்கியுள்ளார் ஜெரார்ட் ஜான்ஸ்டோன்.

இந்த படம் நாம் இதற்கு முன்பு பார்த்த ஹாலிவுட்டின் ஐ ரோபோட் முதல் தமிழின் எந்திரன் வரையிலான படங்களை ஒத்த படமே. ஏனென்றால் இதன் கதைக்களம் ரோபோவிற்கும், மனிதருக்கும் இடையில் நடக்கும் விஷயங்களை மையமாக கொண்டது. இருந்தும் இந்த படம் எந்த இடத்திலும் நமக்கு போரடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கும்.

மேகன் என்ற ரோபோவாக Amie Donald என்ற பெண் நடித்துள்ளார். அவர் உண்மையான ரோபோட் எனும் அளவிற்கு கிராபிக்ஸ் சிறப்ப்பாக செய்திருப்பார்கள். ஜெம்மா (அலிசன் வில்லியம்ஸ்) கதாநாயகியாக நடித்திருப்பார் மிகவும் சிறப்பான நடிப்பை வழிப்படுத்தியிருப்பார். அவருடன் இருக்கும் குழந்தை கேரக்டரில் வயலட் மெக்ரா நடித்துள்ளார். இந்த 3 பேரை சுற்றிதான் கதை நடக்கும். மூவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்திருப்பார்கள்.

இந்த படத்தின் சவுண்ட் டிசைனிங் ஒர்க்கை பாராட்டியே ஆக வேண்டும். பல இடங்களில் நம்மை பரபரப்பின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. மேலும் கிராபிக்ஸ், மியூசிக், கேமரா, எடிட்டிங் என அனைத்து டெக்னிக்கல் விஷயங்கலிலும் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளனர். மேகன் கதாபாத்திரத்தின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். உங்களுக்கு ஹாரர் த்ரில்லர் படம் பிடிக்கும் என்றால் இந்த படம் உங்களை மிகவும் கவர வாய்ப்பு உள்ளது. இந்த படம் 2வது பாகமும் எடுத்துவருவதாக கூறப்படுகிறது.

இணைய தலைமுறை ரேட்டிங்: 3.5/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d