LIC – ல் வேலைவாய்ப்பு: டிகிரி படிச்சிருந்தா போதும்…

Reading Time: < 1 minutes

நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான, LIC – ல் Assistant Administrative Office பணிக்கு 300 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LIC JOB OPENINGS 2023

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

BA, B.Sc,B.com போன்ற இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

எவ்வுளவு சம்பளம்:

அடிப்படை சம்பளம்- ரூ, 53,600

வயது வரம்பு:

01/01/2023 அன்று 21 முதல் 30 வருடங்களாக இருக்க வேண்டும். 02/01/1993 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2002 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

இடஒதுக்கீடு விபரம்:

அரசு விதிகளின்படி, இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு,  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெறலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

3 நிலை தேர்வுகள் இருக்கும்.

முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) வெற்றி பெறுபவர்கள், முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) தேர்ந்தெடுக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு தகுதி பெறுவர். முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் இருக்கும்.

விண்ணப்பபிப்பது எப்படி:

licindia.in என்ற இணையத்தில், careers > Recruitment of AAO(Generalist) 2023 என்ற இணைப்பு வழியே விண்ணப்பிக்கலாம். முக்கியமாக 31-01-2023 அன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அணைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: