விஷாலின் “லத்தி” படம் எப்படி இருக்கு?

Reading Time: < 1 minute

A.வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தியேட்டரில் இன்று வெளியாகி உள்ளது “லத்தி”. இந்த படம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம்.

கான்ஸ்டபுள் ஆன விஷாலும் அவரது மகனும் ஒரு பெரிய ரவுடி கும்பலிடம் மாட்டி கொள்கிறார்கள் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை சுருக்கம். விஷாலின் மனைவியாக சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.

பீட்டர் ஹெயின் சண்டை உருவாக்கம் பாராட்டத்தக்கது. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பு. படத்தின் மிகப்பெரிய பலமே சண்டை காட்சிகள் தான். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் பிண்ணனி இசை தெரிக்கிறது, பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது.

விஷால் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். சண்டை காட்சிகள் வழக்கம் போல செமயாக நடித்துள்ளார். மேலும் சுனைனா மற்றும் விஷாலின் மகனாக வரும் சிறுவன் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

மெயின் கதைக்கு வரும் வரை காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். சண்டை காட்சிகளில் மெனக்கெடல் தெரிந்தாலும் கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. உங்களுக்கு சண்டை காட்சிகள் நிறைந்த படம் பிடிக்கும் என்றால் யோசிக்காமல் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இந்த “லத்தி”.

இணைய தலைமுறை ரேட்டிங்: 3/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d