இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள செம்பி திரைப்படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், நிலா, தம்பி ராமயை உட்பட பலர் நடித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பிரதேசத்தில் தன் பேத்தியுடன் வசிக்கும் கோவை சரளா. அவரது பேத்தியிடம் தேனை ஒரு இடத்தில் கொடுக்க சொல்லி அனுப்புகிறார். செல்லும் வையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். தன் பேத்திக்கு நீதி கிடைக்க போராடுகிறார் அவரது பாட்டி கோவை சரளா.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் நடிகை கோவை சரளா. சிறப்பான நடிப்பால் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அவர் அழுகும் நேரத்தில் நம்மை அறியாமல் நமக்கும் கண்ணீர் வருகிறது. அவரது கேரியரிலேயே இது முக்கியமான படமாக இருக்கும்.
செம்பியாக நடித்த சிறுமி நிலாவை பாராட்டியே ஆக வேண்டும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அஸ்வினுக்கு இந்த படம் நல்ல பேரை கொடுக்கும். வழக்கறிஞராக நடித்துள்ளார். தம்பி ராமையாவின் காமெடி கொஞ்சம் ஆறுதல். படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் பேருந்திலேயே நகர்கிறது.
ஜீவனின் ஒளிப்பதிவில் நாம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றது போல் மிகவும் அழகாக இருக்கிறது காட்சியமைப்பு. நிவாஸ்.கே.பிரசன்னாவின் பிண்ணனி இசை படத்தின் காட்சிகளோடு ஒன்றி இருப்பது குறிப்பிடதக்கது.
அழுத்தமான இந்த படத்திற்கு இன்னும் சரியான திரைக்கதை அமைத்திருக்கலாம் என்று தோன்றியது. லாஜிக் இல்லாத காட்சிகளும், மேலும் பேருந்தில் நடக்கும் சம்பவங்கள் யார் வாழ்விலும் நடக்க வாய்ப்பில்லை. இவை அனைத்தும் சினிமா லிபர்ட்டி என்று எடுத்துக்கொண்டாலும் இன்னும் சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்லாமல் போனதாகவே முடிகிறது செம்பி.
இணைய தலைமுறை ரேட்டிங்: 3 /5