விடுமுறைக்கு கொடைக்கானல் போக திட்டமிட்டுள்ளீர்களா? இந்த கிராமங்களை மிஸ் பண்ணாம விசிட் பண்ணுங்க.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இடம் கொடைக்கானல். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை பிரதேசமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளிரான கிளைமேட் நிலவுகிறது.
மார்ச் முதல் ஜூன் மாதம் வரை இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கோடை லேக், பில்லர் ராக், குணா கேவ், கோக்கர்ஸ் வாக், டால்ஃபின் ராக், பைன் காடுகள் என்று கொடைக்கானலுக்குள் சுற்றி பார்க்க இடங்கள் உள்ளன. ஆனால் அதிகம் பேர் சுற்றி பார்க்காத கொடைக்கானல் கிராமங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பூம்பாறை
பூம்பாறை கொடைக்கானலில் உள்ள அழகிய கிராமம், கொடைக்கானலில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் உள்ளது. இங்குள்ள குழந்தை வேலப்பர் கோவில் 3000 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டது. மேலும் இங்கு ஒரிஜினல் மலைப்பூண்டு, மற்றும் தேன் கிடைக்கும். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள வியூ பாயிண்டில், சிறிது நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அழகான வீடுகள் மற்றும் படிக்கட்டுகள் கொண்ட மலைகளின் நடுவே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

கூக்கால்
கொடைக்கானலில் உள்ள மற்றொரு அழகிய மலைக்கிராமம் கூக்கால், பலரும் அறிந்திராத இந்த இடம் இயற்கை அழகு சூழ்ந்து காணப்படுகிறது.இந்த கிராமத்திற்கு பைக்கில் செல்லும் டிராவலர்கள் இந்த பாதையை செமயாக எஞ்சாய் செய்யலாம். கொடைக்கானலில் இருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் சுற்றி பார்க்க கூக்கால் லேக், காடுகள் மற்றும் புறா கல் வியூ பாயிண்ட்கள் உள்ளன.

மன்னவனூர்
கூக்கால் கிராமத்திலிருந்து சிறிது தொலைவில் மன்னவனூர் உள்ளது. இந்த இடத்தில் தான் ஐ, பேரன்பு உட்பட பல படங்களின் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்த இடத்தை மினி சுவிட்சர்லாந்த் என்றும் அழைப்பார்கள். இங்குள்ள் Farm house மற்றும் லேக் ஆகிய இடங்களை பாருங்கள். மேலும் நிறைய படங்களின் சூட்டிங் இந்த இடத்தில் எப்போது நடக்கும். இந்த இடம் கொடைக்கானல் டவுனிலிருந்து 33 கி.மீ தொலைவில் உள்ளது.

வெல்லகவி
வட்டகனல் டால்பின் வியூ பாயிண்டில் இருந்து 3 மணி நேரம் டிரக் செய்து வந்தால் வெல்லகவி என்ற அழகிய யாரும் அதிகம் அறிந்திடாத அழகிய இடம். காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் எனவே கவனமாக செல்வது நல்லது. நல்ல மனிதர்கள், அருமையான இயற்கை வியூ இதை விட என்ன வேணும்? கொடைக்கானலில் இருந்து வட்டக்கனல் 6 கி.மீ அங்கிருந்து நீங்கள் டிரக் செய்து இந்த இடத்தை அடையலாம்.

பூண்டி
இந்த கிராமம் மன்னவனூர் பக்கத்தில் உள்ளது. சுற்றி பார்க்க லேக், நீர் வீழ்ச்சி மற்றும் ஃபார்ம் ஹவுஸ் உள்ளது. இங்கு டெண்ட் போட்டு கேம்பிங் செய்யலாம். திரும்பும் இடமெல்லாம் இயற்கையின் அழகை ரசிக்கலாம். கொடைக்கானலில் இருந்து இந்த இடம் சுமார் 38 கி.மீ தொலைவில் உள்ளது. கேரள இளைஞர்கள் பைக்கில் அதிகம் வந்து செல்லும் ஸ்பாட்.
