JEE Main 2023 Admit Card: ஹால் டிக்கெட் எப்போது?

JEE-Mainexam-admit-card-2023
Reading Time: 2 minutes

ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஹால்டிக்கெட் jeemain.nta.nic.in இணைய தளத்தில் வெளியிடப்படப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

JEE Main 2023 Admit Card

ஜே.இ.இ மெயின் 2023 தேர்வுக்கான அட்மிட் கார்டு:

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.  இதற்கான அட்மிட் கார்ட் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தெரிவித்துள்ளது.

என்.டி.ஏ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜே.இ.இ மெயின் அட்மிட் கார்டு 2023 அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in ஜனவரி மூன்றாவது வாரத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

4 அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள்  தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன.

JEE Main 2023 Admit Card

JEE Main 2023 Admit Card டவுன்லோட் செய்வது எப்படி

  •  jeemain.nta.nic.in இணையதளத்தை கிளிக் செய்யுங்கள்
  • முகப்பு பக்கத்தில், “JEE Main 2023 Session 1 Admit Card” லிங்கை கிளிக் செய்யுங்கள்
  • உங்களது அப்ளிக்கேஷன் நம்பர், பாஸ்வேர்ட் மற்றும் பிற விவரங்களை நிரப்புங்கள்
  • உங்களது JEE Main 2023 Admit Card இப்போது கிடைக்கும்
  • டவுன்லோட் செய்து தேர்வுக்கு பிரிண்ட் செய்து வைத்து கொள்ளுங்கள்

JEE Main 2023 தேர்வு தேதிகள்

 2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

JEE Main 2023 தேர்வு டைமிங் 

இந்த தேர்வு மொத்தம் இரண்டு ஷிப்டாக நடக்கிறது. முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 12 மணி வரை, இரண்டாவது ஷிப்ட் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: