மெடா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் இளைஞர்களுக்காக புதிய ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. அதுகுறித்து விவரங்களை பார்க்கலாம்.

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் Quiet Mode என்ற புதிய ஆப்ஷனை அறிமுகம் செய்ய உள்ளது.Quiet Mode இந்த ஆப்ஷன் உங்களது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நேரத்தை குறைக்க உதவும் என்கிறார்கள். இந்த மோடை நீங்கள் ஆக்டிவேட் செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் நோடிபிகேஷன் மற்றும் பிற மெசேஜுகள் உங்களை தொந்தரவு செய்யாது. நேரடி மெசேஜுகளுக்கு சைலண்ட் மோட் என்று தானாக மெசேஜ் அனுப்புவதன் மூலம் உங்களது நேரத்தை செலவிடுவதை குறைக்க முடியும்.
இளைஞர்களுக்காக இந்த ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் தங்களது படிப்பின் மீது ஆர்வம் காட்டவும், இரவில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை குறைக்கவுமே இந்த ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நண்பர்கள் மற்றும் பாலோவர்களிடம் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடித்து தங்களது முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்த இந்த ஆப்ஷன் பயன்படும் என்றும் மேலும் தானியங்கி மெசேஜை ஆக்டிவேட் செய்வதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் இல்லை என்று உங்களது பாலோவர்களும் தெரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
நீங்கள் Quiet Mode ஆக்டிவேட் செய்து பின்னர் ஆன்லைன் வரும்போது உங்களுக்கு வந்த மெசேஜ் மற்றும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் நீங்கள் பெறலாம். இன்ஸ்டாகிராம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைவரும் இந்த Quiet Mode ஆப்ஷனை பெறலாம். இந்த ஆப்ஷன் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகமாகி உள்ளது. மற்ற நாடுகளில் விரைவில் இந்த ஆப்ஷனை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.