உங்களது போஸ்ட் மற்ற பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள இன்ஸ்டாகிராம் புதிய டூலை அறிமுகப்படுத்தியுள்ளது
இன்ஸ்டாகிராம் ஒரு புதிய டூலை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் இன்ஸ்டாகிராம் விதிகளை மீறினால் அவர்களின் கணக்கில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை இந்த புதிய கருவி காட்டும். அதனை பயனர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக வடிவமைத்துள்ளனர். இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி, இந்த முடிவு இன்ஸ்டாகிராமின் “வெளிப்படைத்தன்மையை” காட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பயனர்கள் தங்கள் தளத்தில் விதிகளை மீறியதாக குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகளை திருத்தவோ அல்லது நீக்கவோ முடியும். அவர்களது பதிவுகள் தவறாக குறிப்பிடப்பட்டதாக பயனர்கள் உணர்ந்தால் இன்ஸ்டாகிராமுக்கு மேல்முறையீடு செய்யலாம், இன்ஸ்டாகிராம் அதனை மறுமுறை செக் செய்வார்கள்.
“சில நேரங்களில் உங்கள் கணக்கு, உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் [எங்கள்] பரிந்துரைகளில் காண்பிக்க தகுதியற்ற நிலையில் இருக்கும்”
“எங்கள் ‘பரிந்துரை’ வழிகாட்டுதல்கள் அல்லது பரிந்துரை வழிகாட்டுதல்களை மீறும் விஷயங்களை நீங்கள் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தால் … உங்களது போஸ்ட் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படாமல் போகலாம் , “என்றும் மொசேரி ட்விட்டரில் கூறியுள்ளார்.
கீழ்வரும் ஆப்சனை கிளிக் செய்து உங்களது கணக்கின் நிலையை தெரிந்து கொள்ளலாம்,
Profile -> Menu -> Settings -> Account -> Account Status
இன்ஸ்டாகிராம் இளைஞர்களின் மிகவும் விருப்பமான சமூக வலைதளமாக உள்ளது, குறிப்பாக இந்தியாவில் டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் மற்றும் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. ரீல்ஸ் மற்றும் போஸ்ட் கண்டெண்டுகளும் அதிகரித்துள்ளதால் அதனை முறைப்படுத்த இன்ஸ்டாகிராம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுவரை பதிவுகள் அவர்களது வழிகாட்டுதல் படி இல்லை என நீக்கப்பட்டால் அதன் காரணம் நமக்கு தெரியாது ஆனால் இப்பொது அதனை அறிந்துகொள்ளவே இந்த டூல் என்றும் இன்ஸ்டாகிராம் “வெளிப்படைதன்மையை” விரும்புவதாகவும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி தெரிவித்துள்ளார்.