Infinix Note 12i இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது. தேதி, விலை மற்றும் பிற விவரங்களை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் 12ஐ (2022) ஆனது ஜனவரி 25, 2023 அன்று பிளிப்கார்ட் வழியாக அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் மை ஸ்மார்ட் பிரைஸால் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்த சாதனத்தின் விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 4 ஜிபி ரேம் உடன் வரும், இது 3 ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட சேமிப்பகத்தைப் பயன்படுத்தி நீட்டிக்க முடியும்.
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது Infinix Note 12i ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜனவரி 25, 2023 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. பிளிப்கார்ட்டின் லேண்டிங் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மொபைல் 6.7 இன்ச் ஃபுல் எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும். மீடியாடெக் ஹீலியோ ஜி 85 ப்ராசஸர் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்தோனேசியா மற்றும் கென்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாடல் 4 ஜிபி ரேம் மற்றும், 3 ஜிபி வரை எக்ஸ்டண்டட் மெமரியை கொண்டிருக்கும். இந்த மாடல் வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் 12ஐ (2022) MediaTek Helio G85 ப்ராஸசர் மற்றும் Mali G52 கொண்டிருக்கும். மேலும் இந்த மாடல் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 12 மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. 50 MP கேமரா ஏஐ லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா ஆப்ஷ்னை கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் சமீபத்தில் இந்தியாவில் நிறைய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்கிறது. சமீபத்தில் இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5 ஜி ஸ்மார்ட்போனை ரூ.29,999 என்கிற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 920 ப்ராசஸர் மூலம் செயல்படுகிறது. 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருந்தது. இந்த மொபைலில் வெறும் 12 நிமிடங்களில் 0 முதல் 100% வரை பாஸ்ட் சார்ஜ் செய்யலாம் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் அறிவித்தது.