ODI: இரட்டை சதம் விளாசிய ஷிப்மன் கில்

Reading Time: < 1 minutes

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய ஷிப்மன் கில்.

shubman Gill

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை தெறிக்க விட்டனர். கேப்டன் ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.  அதன்பின்னர் ஷூப்மன் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.

நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சை எர்திர்கொண்ட ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களில் 200 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷூப்மன் கில் பெற்றுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.

ODIயில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

ரோகித் சர்மா, 265 – vs Sri Lanka, 2014

மார்டின் குப்டில், 237* – vs West Indies, 2015

விரேந்தர் சேவாஹ், 219 – vs West Indies, 2011

கிறிஸ் கெயில், 215 – vs Zimbabwe, 2015

பாகர் ஜாமன், 210* – vs Zimbabwe, 2018

இசான் கிசன்210 – vs Bangladesh, 2022

ரோகித் சர்மா, 209 – vs Australia, 2013

ரோகித் சர்மா208* – vs Sri Lanka, 2017

ஷிபான் கில், 208 – vs New Zealand, 2023

சச்சின் டெண்டுல்கர், 200* – vs South Africa, 2010

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: