2022ம் ஆண்டின் டாப் 10 இந்திய திரைப்படங்கள்

Reading Time: 3 minutes

IMDB தளம் 2022ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அது குறித்த தொகுப்பை காணலாம்.

10. 777 Charlie

Image Source: Hindu Tamil

IMDB Rating: 8.9/10

OTT Platform: Amazon Prime Video

கன்னட சினிமாவின் முன்னனி நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான திரைப்படம் 777 சார்லி. சார்லி என்ற நாயின் ஆசையை நிறைவேற்றும் கதாநயகன். பீல் குட் டிராமாவாக வெளியான இந்த திரைப்படம் விலங்கு பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

9. Ponniyin Selvan: Part One

Image courtesy: India Today

IMDB Rating: 7.9/10

OTT Platform: Amazon Prime Video

இயக்குநர் மணிரத்ன இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “பொன்னியின் செல்வன்: பாகம் 1”. எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் பெரிய சாதனை படைத்தது.

8. Sita Ramam

Image courtesy: Indiaglitz

IMDB Rating: 8.6/10

OTT Platform: Amazon Prime Video

துல்கர் சல்மான், மிருனாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா நடித்து பான் இந்தியா திரைப்படமாக வெளியான “சீதா ராமம்” ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படம் காட்சியமைப்பு மற்றும் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

7. Major

Image source: Indiaglitz

IMDB Rating: 8.2/10

OTT Platform: Netflix

சசி கிரன் இயக்கத்தில் சேஷ் அதிவி நடித்த “Major” திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. IMDB வெளியிட்டுள்ள சிறந்த படங்கள் வரிசையில் 7 வது இடத்தை பிடித்துள்ளது.

6. Rocketry: The Nambi Effect

Image Source: TOI

IMDB Rating: 8.2/10

OTT Platform: Amazon Prime Video

நடிகர் மாதவன் இயக்கி நடித்து பான் இந்தியா அளவில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்”. ராக்கெட் சைண்டிஸ்ட் நம்பி நாராயணனின் வாழ்க்கை பதிவை படமாக எடுத்திருந்தார். இந்த படம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் வெகுவாக ரசிக்கப்பட்டது.

5. Kantara

Image Source: The Hindu

IMDB Rating: 8.6/10

OTT Platform: Amazon Prime Video

ரிஷப் செட்டி இயக்கி நடித்து உலக அளவில் கலெக்‌ஷனை குவித்த கன்னட திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடம் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. இந்த திரைப்படம் இந்த வருடத்தின் இறுதியில் வந்தாலும்

4. Vikram

Image Source: jagranjosh.com

IMDB Rating: 8.4/10

OTT Platform: Hotstar

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி என பல முக்கிய நாயகர்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் இந்த வருடத்தில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

3. K.G.F: Chapter 2

Image Source:bollywoodhungama.com/

IMDB Rating: 8.4/10

OTT Platform: Amazon Prime Video

2018ம் ஆண்டு கன்னட மொழியிலிருந்து பான் இந்தியா மூவியாக வெளியாகி வசூலை குவித்த K.G.F படத்தின் இரண்டாம் பாகம் 2020ம் ஆண்டு வெளியாகி ரூ. 1,000 கோடி வசூலை அள்ளியது. இந்த படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த படத்தின் முதல் பாகத்திற்கு பிறகே அவர் இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்டாராக மாறிவிட்டார்.

2. The Kashmir Files

IMDB Rating: 8.3/10

OTT Platform: Zee 5

இயக்குநர் Vivek Agnihotri. இயக்கத்தில் வெளியான “தி காஷ்மீர் ஃபைல்ச்” IMDB -யின் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படம் zee 5 தளத்தில் ரிலீசாகி உள்ளது.

1.RRR (ரத்தம் ரணம் ரெளத்திரம்)

image source: crazymovieupdates.com

IMDB Rating: 8/10

OTT Platform: Zee 5, Netflix, Hotstar

பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜீனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான “RRR” திரைப்படம் ,2022ம் ஆண்டிற்கான IMDB யின் சிறந்த 10 திரைப்படங்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: