IBPS SO Prelims 2022 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (எஸ்.ஓ) முதல்நிலைத் தேர்வுகளை எழுதியவர்கள் தங்கள் முடிவை ஐ.பி.பி.எஸ்ஸின் ibps.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பார்க்கலாம்.

IBPS SO Prelims Result 2022:
ஐ.பி.பி.எஸ் எஸ்.ஓ எழுத்துத் தேர்வு 2022ம் ஆண்டு டிசம்பர் 24 முதல் 31 வரை நடத்தப்பட்டது. Institute of Banking Personal Selection (IBPS) இன்று ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (எஸ்.ஓ) முதல்நிலைத் தேர்வுகளின் முடிவை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்கள் முடிவுகளை ஐ.பி.பி.எஸ்ஸின் ibps.in. என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது.
IBPS SO Prelims Result 2022:எப்படி பார்ப்பது?
- ibps.in என்ற வெப்சைட்டிற்கு செல்லுங்கள்.
- முகப்பு பக்கத்தில் IBPS SO Result 2022 link-ஐ கிளிக் செய்யுங்கள்.உங்க
- லாகின் விவரங்களை பதிவு செய்து சப்மிட் செய்யவும்.
- உங்கள் ரிசல்ட் திரையில் தோன்றும்
- ரிசல்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் சுற்றில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின்தேர்வு ஜனவரி 29, 2023 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு வங்கிகளில் ஐடி அதிகாரி, வேளாண் கள அதிகாரி, ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, மனிதவளம் / பணியாளர் அதிகாரி மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கான ஸ்கேல் 1 பணியிடங்களை நடத்தப்படுகிறது.