மெடா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி 2 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை உலகம் முழுவதும் கொண்டுள்ளது. தங்களது பயனர்களுக்காக நிறைய அப்டேட்டுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பயனர்கள் தங்களுக்கு வரும் மெசேஜுகளுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

உங்களுக்கு வரும் மெசேஜுக்கு வாட்ஸ் அப்பில் எப்படி ரியாக்ட் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
1. வாட்ச் அப் செயலியை ஓபன் செய்து, எதாவது சாட்டிற்கு செல்லுங்கள்
2. நீங்கள் ரியாக்ட் செய்ய விரும்பும் மெசேஜை அழுத்தி கிளிக் செய்யுங்கள்
3. இப்போது எமோஜிக்கள் அந்த மெசேஜ் மீது தோன்றும்
4. உங்களுக்கு விருப்பமான அந்த மெசேஜுக்கு நீங்கள் அனுப்ப விரும்பும் எமோஜியை கிளிக் செய்து அனுப்புங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்
- ஒரு மெசேஜுக்கு ஒரு ரியாக்ஷன் மட்டுமே கொடுக்க முடியும்
- குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மறையும் செட்டிங் (disappearing messages) வைத்திருந்தால் உங்களது ரியாக்ஷனும் மறைந்து விடும்.
- நீங்கள் செய்த ரியாக்ஷனை மறைக்க (hide) முடியாது.
- நீங்கள் செய்த ரியாக்ஷனை பெறுபவர் பார்ப்பதற்கு முன்னால் நீக்கி விட்டால் அவருக்கு தெரிவிக்கப்படாது.
இதற்கிடையில், வாட்ஸ்அப் ஃபார்வர்ட் மீடியா வித் கேப்ஷன் என்ற அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அம்சம் பயனர்கள் மீடியா ஃபைல்களுக்கு பெயர் சேர்க்க உதவும், இதனுடன் இன்னும் பல அம்சங்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இங்கு கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்,