சமூக ஊடகங்களில் அதிகமான கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் இடம் ட்விட்டர். இந்த ட்விட்டரில் நீங்கள் அதிக பாலோவர்ஸை பெற வேண்டுமா? இந்த சிம்பிளான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

ட்விட்டரில் பாலோவர்களை அதிகப்படுத்தும் 10 எளிய டிப்ஸ் | How to increase twitter followers in 10 simple steps
- ரெகுலராக ட்வீட் செய்யுங்கள்
- வீடியோ கண்டெண்டுகளை பதிவிடுங்கள்
- ஹாஷ்டேக்குகளை சரியாக பயன்படுத்துங்கள்
- டிவிட்டர் கம்யூனிட்டியில் அங்கமாகுங்கள்
- ரீட்வீட், ரிப்ளே மற்றும் டேக் செய்யுங்கள்
- ட்விட்டர் த்ரெட்ஸில் (Twitter threads) பகிருங்கள்
- சுயவிவரங்களை தெளிவாக சேருங்கள்
- ட்விட்டர் சாட்டில் பங்கேறுங்கள்
- ட்விட்டருக்கு வெளியிலும் பாலோவர்களை சேருங்கள்
- சரியான நேரத்தில் போஸ்ட் செய்யுங்கள்
இந்த 10 டிப்ஸையும் சரியாக பயன்படுத்தினால் ட்விட்டரில் அதிக பாலோவர்கள் உங்கள் ப்ரொபைலுக்கு கிடைக்கும்.இதுகுறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
ரெகுலராக ட்வீட் செய்ய வேண்டும்
ஃபேஷ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை விட ட்விட்டரில் கண்டெண்ட் அதிகம் போஸ்ட் செய்தால் மட்டுமே பாலோவர்ஸ் அதிகமாவர். RivalIQ தகவலின் படி 25% அதிகம் பர்ஃபார்ம் செய்யும் ட்விட்டர் கணக்குகள் வாரத்திற்கு 12 போஸ்ட்கள், தினசரி 2 போஸ்ட்கள் பதிவு செய்ய வேண்டும்.
வீடியோ கண்டெண்டுகளை பதிவிடுங்கள்
நேரம் கிடைக்கும் போது வீடியோக்களை பதிவிடுங்கள். சுவாரசியமான வீடியோக்களை நீங்கள் பகிரும் போது புதிதாக உங்கள் கண்டெண்டுகளை பார்ப்பவர்கள் அதை பாலோ செய்ய வாய்ப்பு உள்ளது.
ஹாஷ்டேக்குகளை சரியாக பயன்படுத்துங்கள்
உங்கள் பதிவுகள் அனைத்திற்கும் தொடர்பான ஹேஷ்டேக்குகளை பதிவு செய்யுங்கள். அது உங்களது பதிவை சரியான பாலோவர்களை நோக்கி கொண்டு செல்லும். மேலும் ட்ரெண்ட் ஆகும் ஹாஷ்டேக்கில் உங்களது கண்டெண்டுகளை பதிவிடுங்கள். அது நிறைய பார்வையாளர்களை சென்றடைய உதவும்.
ட்விட்டர் கம்யூனிட்டியில் சேருங்கள்
ட்விட்டரில் நீங்கள் பதிவு செய்யும் வகைக்கேற்ற கம்யூனிட்டிக்களின் ஹேஷ்டேக்கை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். ஒரே மாதிரியான விருப்பம் கொண்ட பயனர்களை நீங்கள் இந்த டேக்குகள் மூலம் அடைய முடியும். உங்களது கண்டெண்டுகளை அவர்கள் பார்வையிட்டு அதனை பிந்தொடர வாய்ப்பாக அமையும்.
ரீட்வீட், ரிப்ளே மற்றும் டேக் செய்யுங்கள்
ட்விட்டரில் கண்டெண்டுகளை பதிவிடுவதை தவிர நல்ல பதிவுகளுக்கு கமெண்ட் செய்யுங்கள், உங்களுக்கு பிடித்தபதிவுகளை ரீட்வீட் செய்யுங்கள். மேலும் உங்கள் கண்டெண்டுகளுக்கு ஏற்ற சரியான கணக்குகளை டேக் செய்யலாம். இப்படி ஆக்டிவாக இருப்பதன் மூலம் உங்கள் கணக்கிற்கு அதிக பார்வையாளர்களை ஈர்க்கலாம்.
Twitter threads மூலம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
ட்விட்டரில் 280 கேரக்டர் வரை மட்டுமே பதிவு செய்ய முடியும், எனவே உங்கள் கருத்துக்களை threads மூலம் பதிவு செய்யுங்கள். இது அதிக பார்வையாளர்களை தொடர்ந்து உங்களது அனைத்து ட்வீட்களையும் பாலோ செய்ய வசதியாக இருக்கும்.
உங்கள் கணக்கில் சுயவிவரங்களை தெளிவாக சேருங்கள்

- சரியான புரொபைல் போட்டோ. நீங்கள் ஒரு நிறுவனமாக இருந்தா சரியான லோகோ, அல்லது பர்ஷனல் புரொபைல் வத்திருந்தால் உங்களது போட்டோவை வைக்கலாம்
- சரியான டேக் மற்றும் லொக்கேஷன் குறித்த தகவல்கள். உங்களை பற்றிய சரியான விவரங்களை மிஸ் ஆகாமல் பதிவு செய்ய வேண்டும்.
- உங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள். உங்களது பாலோவர்கள் உங்களை பற்றி தெரிந்து கொள்ள சில விவரங்களை சேர்க்கலாம்.
ட்விட்டர் சாட்டில் பங்கேறுங்கள்
உங்கள் கணக்கை ஆக்டிவாக வைக்க ட்விட்டர் சாட் ரூமில் பங்கேற்கலாம். இது உங்களது அக்கவுண்டின் வளர்ச்சிக்கு உதவும்.
ட்விட்டரை தாண்டி பாலோவர்களை கவருங்கள்
உங்களது ட்விட்டர் கணக்கிற்கு வெளியில் இருந்து பாலோவர்களை கொண்டு வாருங்கள்.

- உங்கள் வெப்சைட்டில் சோசியல் பட்டனில் ட்விட்டரை லிங் செய்யுங்கள்
- உங்களது மார்க்கெட்டிங் இமெயிலில் ட்விட்டர் கணக்கை குறிப்பிடுங்கள்
- உங்களுடைய மற்ற சமூக வலைதள பக்கங்களிலும் ட்விட்டர் குறித்த லிங்கை போஸ்ட் செய்யுங்கள்.
சரியான நேரத்தில் பதிவு செய்யுங்கள்
ட்விட்டரில் ரீச் கிடைக்கும் நேரம் தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் பதிவு செய்யுங்கள். இது உங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிக பார்வையாளர்களை கொண்டு வர உதவும். கீழே ட்விட்டரில் ரீச் உள்ள நேரங்கள் குறித்த இமேஜை பாருங்கள்.

இந்த 10 விஷயங்களை சரியாக பாலோ செய்தாலோ போதும் சீக்கிரம் உங்களது ட்விட்டரில் அதிக பாலோவர்களை பெறலாம். போலியான பாலோவர்களை வாங்குவது உங்கள் கணக்கின் தரத்தை குறைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.