இந்தியாவின் அடையாளச் சான்றுகளில் முக்கியமான ஒன்று வாக்காளர் அடையாள அட்டை. இதை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றுவதை எளிதாக்கும் வகையில், தேர்தல் ஆணையம் இணையத்தில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுதியிருக்கிறது.

இரு முறைகளில் இந்த வழிமுறைகளை மேற்கொள்ளலாம். ஒன்று – இணையவழி, மற்றொன்று – அலுவலகத்தில் விண்ணப்பிப்பது. இரு முறைகளையும் தற்போது தெரிந்துக்கொள்ளலாம்.
இணையதள முறை
- உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தொடர்பான இணையதள பகுதிக்குச் சென்று, Online Voter Registration என்ற பகுதிக்கு செல்லவும்.
- அடுத்து காட்டப்படும் optionகளில் Form 8A-ஐ தேர்ந்தெடுக்கவும்
- புதிதாக ஒரு பக்கத்தில் இந்த Form 8A திறக்கும். அந்த form-ல் உங்களுடைய விவரங்களை கேட்கப்பட்டுள்ள இடங்களில் நிரப்ப வேண்டும்.
- பின்னர் தற்போதைய முகவரியைக் குறிப்பிடும் ஏதேனும் ஓர் ஆவணத்தைப் பதிவேற்ற வேண்டும் ( உதாரணத்திற்கு பயன்பாட்டில் உள்ள பில், வங்கி பாஸ் புத்தகம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணம் போன்றவை).
- அனைத்தையும் பூர்த்தி செய்து பதிவேற்றியவுடன், இணையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- இறுதியாக ஒரு அடையாள எண் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் இணையத்தில் விண்ணப்பத்தைக் கண்காணிக்க பயன்படுத்தமுடியும்.
- விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், அது தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.
- சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தபின், தற்போதைய முகவரியுடன் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் முறை
- உங்களுக்கு அருகே இருக்கும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வதற்கான 8A விண்ணப்பப் படிவத்தை பெற வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதனுடன் தற்போதைய முகவரியில் உள்ள மின்சாரம் / தொலைபேசி கட்டணங்களின் நகல், வங்கி பாஸ் புத்தகம் போன்ற குடியிருப்பு முகவரிக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.
- பின்னர் தேர்தல் அலுவலகத்தில் அந்தப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட பின் உங்களுக்கு எண் ஒன்று வழங்கப்படும். அதை வைத்து, விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துக்கொள்ள முடியும்.
- விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்ட முகவரி அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.