காலண்டர் உருவான வரலாறு தெரியுமா?

Reading Time: 2 minutes

டெய்லி யூசேஜ்ல எல்லாரும் பாக்குறது காலண்டர். இந்த காலண்டர் உருவான வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா.?

காலண்டே என்ற லத்தீன் வார்த்தையிலிருந்துதான் காலண்டர் அப்டீங்கற வார்த்தை உருவாகியிருக்கு. இதற்கு கணக்கு கூட்டுவது என்று பொருள். நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரின் அடிப்படை கிமு 45 ல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டர். இன்றைக்கு உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்ற காலண்டர் கிரிகோரியன் காலண்டர்.

பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப்  கிரிகோரி ஆணைப்படி அலோசியாஸ் என்ற மருத்துவர் தான் 1582 பிப்ரவரி 24 இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைகளை திருத்தி அமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்டு இந்த காலண்டரில் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

1582 இல் அக்டோபரில் இருந்து கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தும், அமெரிக்காவும் 1752ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 இல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸ் இந்த காலண்டரை அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் கடைசி நாடாக இணைந்தது.

இந்திய தேசியக் காலண்டர் எடுத்துக்கொண்டால், கிபி 75 இல் தொடங்கும் சக காலண்டர் தான் இந்தியாவின் தேசிய காலண்டராக கருதப்படுகின்றது. சாத வாகன மன்னரால் சாலிவாகனன் மன்னன் விக்கிரமாதித்தனை போரில் வென்று தொடர்ந்து சக வருடம் தொடங்கியது. இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும், சக வருட காலண்டரும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 2 ஆம் தேதி தான் சக வருடத்தின் முதல் மாதமான சைதிரம் 1 1879 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தமிழ் காலண்டர் சூரியனை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டது.


கிரிகோரியன் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதில் இருக்கிறது.  முகம்மது நபி  மெக்காவிலிருந்து மதினாவுக்கு சென்ற நாளிலிருந்து தான் இஸ்லாமிய காலண்டரின் வருடம் தொடர்ந்தது.


கிபி 622 இல் நிகழ்ந்தது நபிகளின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது. ஜூலியன் காலண்டர் கிமு 45 தேதி பிரபல வானியல் நிபுணராக இருந்த கோசிஜின்சி என்பவரின் அறிவுரைப்படி இந்த காலண்டரை நடைமுறைப்படுத்தியவர் ஜூலியஸ் சீசர். தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இதுதான். ஜூலியன் காலண்டரின் படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: