இந்திய நாட்டின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26, 2023 அன்று கொண்டாடப்பட உள்ளது. உங்களது வாழ்த்துக்களை அனைவருக்கும் பகிருங்கள்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும், இந்திய தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியே கிடைத்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது நவம்பர் 26 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையால் ஒப்புதல் பெறப்பட்டது. அதையடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
வெளிநாட்டவர்கள் தலையீடு இன்றி இந்தியாவுக்கு என்று ஒரு தனிச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியா தனது 74வது குடியரசு தின விழாவை கொண்டாடப்பட உள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும்.இந்நாளில் நமக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்கள், தியாகிகளை நினைவு கூர்வோம்.

இந்த வாழ்த்து அட்டைகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து உங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
