இந்த மகிழ்ச்சி பொங்கும் பண்டிகை தினத்தில் உங்கள் நன்பர்கள், உறவினர்களுக்கு இந்த பொங்கல் வாழ்த்துக்களை பகிருங்கள்.

Pongal wishes 2023 – பொங்கல் வாழ்த்துக்கள் – Pongal Valthukkul status in Tamil
பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரிய கடவுளுக்கும், இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் தினத்தில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை வாட்ஸ் ஆப், ஃபேஷ்புக் மற்றும் மத்த சமூக பக்கத்தில் பகிர்ந்து இனிப்பாக கொண்டாடுங்கள். இணைய தலைமுறையின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை பகிர வாழ்த்து அட்டைகள் மற்றும் எழுத்துக்களை கொடுத்துள்ளோம், இதனை பகிர்ந்து கொண்டாடுங்கள்.

இல்லத்தில் இன்பம் சூழ உள்ளத்தில் உற்சாகம் பொங்க வாழ்க்கையில் வளங்கள் வளர இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்


மொத்தம் 4 தினங்கள் பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை போகி தொடங்கி காணும் பொங்கல் வரை கொண்டாடுவோம்.
போகி அன்று ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி என்பார்கள். இந்த நாளில் பழைய பொருட்களை எரித்து விடுகிறோம்.
தைப்பொங்கல்
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கல். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!
பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
இந்த நாளில் மாடுகளை அலங்காரம் செய்து அவர்களை தெய்வமாக நினைத்து பொங்கல் செய்து படைப்பார்கள்
காணும் பொங்கல்
காணும் பொங்கலில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் 4ம் நாள் இடம்பெறும். இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சென்னை மெரினா பீச்சில் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பொங்கலை கொண்டாடுவர்.