புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023

Reading Time: 2 minutes

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2023ம் ஆண்டு பிறந்துவிட்டது. இந்த வருடம் சிறப்பாக அமைய உங்களுடைய வாழ்த்துக்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவியுங்கள்.

ஒவ்வொரு ஆண்டும், புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம், ஒவ்வொரு வருடமும் புதிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் அடுத்த வருடத்தை தொடங்குகிறோம். 2022 உங்களை பல வழிகளில் சாதனை, சோதனைகளை கொடுத்திருந்தாலும், 2023 அதிலிருந்து வேறுபட்டு ஒரு புதிய மாறுதலை மக்களுக்கு கொடுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது புதிய கனவுகள் புதிய செயல்களை கூடுதல் நம்பிக்கையுடன் தொடங்குவோம்.


இந்த ஆண்டு தொடங்கும் மகிழ்ச்சியான தருணத்தை உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருடன் இணைந்து கொண்டாடுவோம். அவர்களுடன். புத்தாண்டை அவர்களுடன் இணௌந்து கொண்டாட முடியாவிட்டாலும் அவர்களுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பி மகிழலாம்.

2022ம் ஆண்டிற்கு Bye Bye சொல்லி
2023ம் ஆண்டிற்கு Welcome சொல்லுவோம்..

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி மலரட்டும்..
கனவுகள் பூக்கட்டும்..
வெற்றிகள் தொடரட்டும்..
தோல்விகள் தொலையட்டும்..

இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

புத்தாண்டில் பிறக்கட்டும் புது வசந்தம்,
இனி வரும் பொழுதுகள் இனிதாகட்டும்,
புத்துணர்ச்சியுடன் கொண்டாடுவோம்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

புத்தாண்டு என்பது புதிய புத்தகம் போன்றது;
பேனா உங்கள் கைகளில் உள்ளது.
உங்களுக்காக ஒரு அழகான கதையை நீங்களே எழுத
இது உங்களுக்கான ஒரு வாய்ப்பு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2023-ன் தொடக்கம் அனைவருக்கும் இனிய வருடமாக,

இன்பத்தை வாரிவழங்கும் வருடமாக அமைய

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இந்த புதிய வருடத்தை நமது வாழ்க்கையின் வெற்றிப்படிய மாற்றுவோம்!!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: