இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ”வைகப்புயல்” வடிவேலு நடித்துள்ள “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, பிரசாந்த் ரங்கசாமி, ஆனந்த்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்போது இந்த படம் எப்படி இருந்தது என்ற ரிவியூவை பார்க்கலாம்

அதிர்ஸ்டம் தரும் நாய், அந்த நாயை கடத்திய நபரிடம் இருந்து அதை மீட்க நினைக்கும் உரிமையாளர், கடைசியில் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன். நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகை புயல் வடிவேலுவை பார்ப்பதே மகிழ்ச்சி, அவருடைய அறிமுக காட்சி படத்தில் ரசிக்கும் படியே இருந்தது.
ஆனந்த்ராஜ் தனது வழக்கமான படங்களை போன்ற ரோலில் நடித்துள்ளார், அவருடைய காட்சிகள் ரசிக்கும்படியே உள்ளது. யூட்யூப் ரிவியூவர் பிரசாந்த் காட்சிகள் டைமிங் ஒரளவுக்கு ரசிக்கும் படி உள்ளது. முனிஸ்காந்த், மாறன் வரும் காட்சிகள் அந்த அளவுக்கு ரசிக்கும்படி இல்லை.
காமெடி படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என சொல்வார்கள் அதனால் அதை பற்றி சொல்ல தேவையில்லை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள். முதல் பாதி ஸ்லோ சில காமெடிகள் மட்டும் ஒர்க் அவுட் ஆனது, இரண்டாம் பாதியின் கடைசி அரை மணிநேரம் வரும் காமெடி காடிகளுக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தம் அடங்காம கேட்டது.
சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு பாடிய 3 பாடல்களும் ரசிக்கும் விதமாக உள்ளது, பிண்ணனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். மொத்தமாக படம் ஒரு சுமாரான படத்தை பார்த்த அனுபவத்தையே கொடுத்துள்ளது.
Inaiya Thalaimurai Rating: 2.5/5