பகத் பாசில் நடித்துள்ள சிறந்த மலையாள திரைப்படங்கள் – Part 1

Reading Time: 2 minutes

மலையாள சினிமா மட்டுமல்ல இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் மலையாள நடிகர் பகத் பாசில். எந்த கேரக்டர் நடித்தாலும் அதில் அவரது தனித்துவமான, இயல்பான நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து நம் நினைவில் நிற்க செய்வார். நம் உலக நாயகன் கமலஹாசனே அதிக முறை அவரது நடிப்பு குறித்து பாராட்டியுள்ளார்.

அவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான சிறந்த திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Iyobinte Pusthakam (2014)

IMDB Rating: 7.7/10

Available In: Hotstar

Genre: Drama/ Romance

இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் 2014 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ”Iyobinte Pusthakam”. ஆங்கிலேயரின் காலத்திலும் அதற்குப் பின்னான காலத்திலும் மூணாரில் நடப்பதான வரலாற்றுப் புனைவுக் கதையாகும். இயோப் என்பவருக்கும் அவரது மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் விஷயங்களே இந்த படத்தின் கதை.

Vardhan (2018)

IMDB Rating: 7.5/10

Available In: Hotstar

Genre: Drama/ Action / Thriller

அமல் நீரத் இயக்கத்தில் பகத் பாசில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “Vardhan”. துபாயில் இருந்து கேரளா திரும்பும் கணவன்- மனைவி அபின் மற்றும் பிரியா கதாபாத்திரத்தில் பகத் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளாவில் பிரியா வளர்ந்த அவரது சொந்த ஊருக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் சம்பவங்களே மீதிக்கதை. இந்த படத்தின் கிளைமேக்ஸில் Goosebumbs அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.

njan prakasam (2018)

IMDB Rating: 7.7/10

Available In: Netflix

Genre: Drama/ comedy

Sathyan Anthikad இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் “njan prakasam”.வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என துடிக்கும் ஹீரோ. பாரின் செல்வதற்காக குறுக்கு வழிகளை தேர்வு செய்கிறார் கடசியில் என்ன நடந்தது என்பதுதான் கதை.

Kumbalangi Nights (2019)

IMDB Rating: 8.5/10

Available In: Amazon Prime video

Genre: Drama/ Romance

2019 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் “Kumbalangi Nights”. மது சி. நாராயணன் இயக்கத்தில் சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி, பகத் பாசில் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பகத் பாசில் தன் நடிப்பால் மிரட்டியிருப்பார். இந்த படம் கேரள அரசின் 3 மாநில விருதுகளை வென்றுள்ளது.

Trance (2020)

IMDB Rating: 7.3/10

Available In: Amazon Prime Video

Genre: Drama/ Thriller

சிறு வயதிலேயே வாழ்வில் இக்கட்டான தருணங்களை சந்தித்து விட்டு அற்புதம் நிகழ காத்திருப்பவர் விஜு பிரசாத் (பகத்). எதிர்பாராமல் நடக்கும் ஒரு சோக சம்பவம் விஜுவின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. சாதாரண பேச்சாளராக இருந்த விஜு மிகப்பெரிய மதபோதகராக மாறுகிறார். திடீரென அவரது வாழ்வில் திருப்பம் ஒன்று நிகழ்கிறது. இதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார். அந்த சறுக்கலிலிருந்து மீண்டாரா? என்பதே இந்த படத்தின் மீதிக் கதை

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d