ஏகாதசி விரத பலன்கள், கடைபிடிக்கும் முறை

Reading Time: 2 minutes

பெருமாளை விரதம் இருந்து வழிபடும் சிறப்பு மிக்க நாளே ஏகாதசி விரதம். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது எப்படி? இதனால் உள்ள பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.

ஏகாதசி விரத சிறப்புகள்

மற்ற விரதங்களுடன் அப்படி என்ன இந்த ஏகாதசி விரதத்தில் சிறப்பு உள்ளது என்று நமக்கு இருப்பது போலவே பார்வதி தேவிக்கும் தோன்றியுள்ளது. அவர் ஈசன் இடத்தில் சென்று கேட்ட போது அவர் பார்வதிக்கு நிறைய விளக்கம் கொடுத்துள்ளார். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அஷ்வமேத யாகம் செய்த பலன் ஒருவருக்கு கிடைக்க வேண்டுமென்றால் இந்த ஏகாதசி விரதம் இருந்தால் போதும்.

நோய், வறுமை நீங்கும், செல்வம் சேரும், எதை வேண்டி நீங்கள் விரதம் கடைபிடிக்கிறீர்களோ அந்த காரியம் வெற்றி பெறும். இவை அனைத்தும் வாழும் காலத்தில் நடக்கும் என்றும், நமது வாழ்க்கைக்கு பிறகு வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்றும் பெரியொர்கள் கூறுகின்றனர்.

ஒரு மாதத்திற்கு 2 ஏகாதசி விரத தினங்கள் உண்டு. வருடத்திற்கு 25 ஏகாதசி தினங்கள் இருக்கும். இந்த 25 நாட்களும் யார் வழிபாட்டை செய்கிறார்களோ அவர்களுக்கு அனைத்து பலன்களும் கிட்டும்.

விரதத்தை கடைபிடிக்கும் முறை

முதல் நாள் தசமி மதியத்தோடு சாப்பிட்டு, இரவு பழம், பால் எடுத்து கொள்ளலாம். அடுத்த நாள் ஏகாதசி, அன்று காலை எழுந்து நீராடி பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்யலாம். ஏகாதசி அன்று துளசி பறிக்க கூடாது எனவே முதல் நாளே துளசி பறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆலயம் செல்ல முடிந்தால் இன்னும் சிறப்பு. அன்று நாள் முழுவதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். தண்ணீரிலும் துளசி போட்டு எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது.

அடுத்த நாள் துவாதசி காலை எழுந்து நீராடி, பெருமாளுக்கு நெய்வேத்யம் செய்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கே இந்த விரதத்தின் முழுபலன் கிட்டும். இந்த விரதத்தை நீங்கள் எதை வேண்டி செய்கிறீர்களோ அந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும். 25 ஏகாதசியும் விரதம் இருந்தால் தான் பலன் கிட்டுமா என்றால், ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு அதனால் நீங்கள் சிரத்தையுடன் செய்யும் விரதத்திற்கு பலன் கண்டிப்பாக இருக்கும்.

ஏகாதசி விரத தினங்கள் 2023

2023ம் ஆண்டு உள்ள ஏகாதசி விரத தினங்களின் பட்டியலை கீழே பார்க்கலாம்.

மாதம்தேதிமாதம்தேதிமாதம்தேதி
ஜனவரி18 புதன்ஜூன்14 புதன்அக்டோபர்10 செவ்வாய்
பிப்ரவரி01 புதன்ஜூன்29 வியாழன்அக்டோபர்25 புதன்
மார்ச்03 வெள்ளிஜூலை13 செவ்வாய்நவம்பர்9 வியாழன்
மார்ச்18 சனிஜூலை29 சனிநவம்பர்23 வியாழன்
ஏப்ரல்01 சனிஆகஸ்ட்12 சனிடிசம்பர்9 சனி
ஏப்ரல்16 ஞாயிறுஆகஸ்ட்27 ஞாயிறுடிசம்பர்22 வெள்ளி
மே01 திங்கள்செப்டம்பர்10 ஞாயிறு
மே31 புதன்செப்டம்பர்25 திங்கள்

One thought on “ஏகாதசி விரத பலன்கள், கடைபிடிக்கும் முறை

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d