ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா படம் எப்படி இருக்கு என்று இந்த ரிவியூவில் பார்க்கலாம்.

இயக்குநர் கிங்ஸ்லி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மெயின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “டிரைவர் ஜமுனா”. தன் குடும்ப கஷ்டம் காரணமாக டாக்ஸி டிரைவராக பெண் கதாப்பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனாவாக நடித்துள்ளார். அவரது டாக்ஸியில் ஷேரிங் மோடில் ஏறும் 3 பயணிகள். அந்த 3 பயணிகளும் முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஸ் என்ன செய்தார்? எப்படி தப்பித்தார் என்பதே கதை.
படத்தின் நீளம் ஒரு மிகப்பெரிய ப்ளஸ் 90 நிமிடத்தில் ஓடும் படம் துளியும் போர் அடிக்காமல் பரபரப்பை மெயிண்டென் செய்வது சிறப்பு. ஐஸ்வர்யா ராஜேஷ் கதைத்தேர்வு இந்த படத்திலும் சரியாக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் மூலம் மொத்த கதையையும் தாங்கியுள்ளார்.
பயணியாக நடித்துள்ள 3 பேரும் சிறப்பாக எதார்த்தமாக நடித்துள்ளனர். மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை சரியாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை மற்றும் கிளைமேக்ஸ் டிவிஸ்ட் மிகப்பெரிய ப்ளஸ். ஜிப்ரான் பிண்ணனி மற்றும் ஒளிப்பதிவாளர் காட்சியமைப்பு மிகப்பெரிய ப்ளஸ்.
யூகிக்க கூடிய சில சீன்கள் மற்றும் சில லாஜிக் மீறல்களை மைனஸாக கூறலாம். இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. மொத்தமாக இந்த படம் எப்படி இருக்கு என்று கேட்டால் நிறைய திருப்பங்கள் உள்ள விறுவிறுப்பான திரைப்படம் இந்த டிரைவர் ஜமுனா.
இணைய தலைமுறை ரேட்டிங்: 3/5
One thought on “‘டிரைவர் ஜமுனா’ படம் எப்படி இருக்கு?”