தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் குறிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய வெப்சைட்டில் http://www.dipr.tn.gov.in மிக முக்கியமானது.

நம்ம எல்லாருக்குமே படம் எப்படி டவுன்லோட் பண்ணனும் எந்த வெப்சைட்ல இருந்து டவுன்லோட் பண்ணனும், அதுக்கு என்ன பண்ணனும் எல்லாமே தெரியும். பாட்டெல்லாம் எந்த வெப்சைட்ல இருந்து பண்ணனும்னு தெரியும். தேவையில்லாத எல்லா வெப்சைட்டும் நமக்கு எப்படி Finger டிப்ல தெரிஞ்சு வச்சுருப்போம்.
ஆனா தமிழ்நாட்ல இருக்குற எல்லாரும் ஒரு வெப்சைட் கண்டிப்பா தெரிஞ்சு வச்சிகணும். அதை பல பேர் தெரிஞ்சு வச்சுக்கறதுல்ல.
அதான் தமிழ்நாடு அரசோட டிஐபிஆர் வெப்சைட். http://www.dipr.tn.gov.in.
இந்த வெப்சைட்ல அப்படி என்ன ஸ்பெஷலா இருக்கு அப்டீனு கேட்டீங்கனா..? தமிழக அரசின் முக்கியமான அனைத்து விஷயங்களும் இதுல இருக்கும். முக்கியமான உயர் அதிகாரிகளோட பிஆர்ஓ நம்பர் வரைக்கும் இந்த வெப்சைட்ல இருக்கு.

முக்கியமா, கவர்னர் யாரு, கவர்னருடைய அலுவலகத்தில் என்னென்ன நம்பர் இருக்கு, அதுல யார் யாரெல்லாம் இருக்காங்க அவங்களுடைய பெயர், போன் நம்பர், ஃபேக்ஸ் நம்பர், எல்லாமே அதுல கொடுத்திருப்பாங்க..
முதல்வர் அலுவலகம் துவங்கி மாவட்டத்தின் கடைகோடி அரசு அலவகம் வரை அனைவரையும் தொடர்புகொள்ள தேவையான, மின்அஞ்சல், தொலைபேசி எண், முகவரி போன்றவை இதில் இருக்கும்.
அரசு சார்பில வெளியிட்ற, செய்தி குறிப்பு செய்தி வெளியீடு தனியா இருக்கும். அதாவது ஒவ்வொரு துறை சார்ந்து, இந்த துறை சார்பில, இந்த இடத்துல இந்த நிகழ்வு நடந்துருக்கு அப்டீனு அனைத்து தகவலும் இந்த வெப்சைட்ல கிடைக்கும்.
உங்க பகுதில எதாவது பிரச்சனை யாரை தொடர்புகொள்வதுனு தெரிலனு யோசிச்சிங்கனா, இந்த வெப்சைட் போனா அதற்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும்.