ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படத்தின் ‘நாடோடி மன்னன்’ பாடல் வெளியாகி உள்ளது.
திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து தனுஷின் வாத்தி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஏற்கனவே வா வாத்தி பாடல் ஹிட்டான நிலையில், அந்தோனி தாசன் பாடி நாடோடி மன்னன் என்ற குத்து பாடல் வெளியாகி உள்ளது. “வாத்தி” திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.