மத்திய துணை காவல் படையில் 1458 காலியிடங்கள்

Reading Time: < 1 minutes

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை காவல் படை உதவி (Central Reserved Police Force) சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் (எழுத்துப்பணி) பதவிக்கான ஆட்தேர்வினை நடத்துகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவி சார்பு ஆய்வாளர்(சுருக்கெழுத்தர்) – 143 காலியிடங்கள்- சம்பளம்: ரூ.29200 முதல் ரூ.92300/- வரை

தலைமைக் காவலர் (எழுத்தர்) – 1315 காலியிடங்கள் – சம்பளம்: ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விண்ணப்பம் பெறும் கடைசி தேதி அதாவது 25/01/2023 அன்று 18 முதல் 25 வருடங்களாக இருக்க வேண்டும் அதாவது விண்ணப்பதாரர் 26/01/1998 தேதிக்கு முன்பு அல்லது 25/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிலை (10, +2) அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 25/01/2023

தேர்ந்தெடுக்கும் முறை

கம்யூட்டர் தேர்வு, திறனாய்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மெடிக்கல் டெஸ்ட் ஆகியவற்றை வைத்து தேர்வு செய்வார்கள்.

தேர்வு கட்டணம்

தேர்வு கட்டணம் ரூ.100. SC/ST/Women/ESM பிரிவினரை தவிர.

விண்ணப்பிக்கும் முறை

  1. விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை https://crpf.gov.in/index.html இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
  2. Register link ஐ கிளிக் செய்து புரொபைலை கிரியேட் செய்யுங்கள்
  3. postஐ தேர்வு செய்து, அப்ளிக்கேசன் பார்மை நிரப்பி, டாகுமண்டை அப்லோடு செய்யுங்கள்
  4. தேர்வு கட்டனத்தை செலுத்தி, அப்ளிக்கேஷன் பார்மை சப்மிட் செய்யுங்கள்

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: