”Connect” ஹாரர் மூவி ரிவியூ

Reading Time: < 1 minute

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கீர் மற்றும் வினய் நடிப்பில் வெளியாகி உள்ள “கனெக்ட்” ஹாரர் திரைப்படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

கொரோனா ஆரம்ப காலக்கட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களம். கதாநாயகிக்கு ஒரு அழகான குடும்பம். கதாநாயகியின் கணவன் இறந்து போக, தனது மகளின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்கிறார். அடுத்த எதுபோன்ற திகில் சம்பவங்கள் நடந்தது என்பதே மீதிக்கதை.

இது ஒரு ஹாரர் திரைப்படம், தி எக்ஸார்சிஸ்ட் என்ற ஆங்கில படத்தை போன்ற படம். மேலும் பல ஹாலிவுட் ஹாரர் படங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. இந்த படத்தின் மிகப்பெரிய பலம் சவுண்ட் டிசைனிங், நிறைய இடங்களில் ஹாரர் அனுபவங்களை கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் ஒர்க்கை பாராட்டியே ஆக வேண்டும். பிரித்வி சந்திரசேகரின் இசை படத்திற்கு பலம்.

நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கீர் மற்றும் வினய் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளனர். நயன்தாரா மகளாக நடித்துள்ள ஹனியா மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஒர்க் அவுட் ஆன பாண்டிங் நயன்தாராவுக்கும் அந்த குழந்தைக்கும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அனுபம் கீர் டப்பிங் சரியாக இல்லை. இது போன்ற சில குறைகளும் இல்லாமல் இல்லை.

ஹாரர் மூவி அதிகம் பார்க்கும் நபர் என்றால் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல் தோன்றலாம், புதிதாக பார்க்கும் நபர்களுக்கு இந்த படம் புது அனுபவத்தை கொடுக்கலாம்.

இணைய தலைமுறை ரேட்டிங்: 3/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d