கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவதில் முக்கியமான ஒன்று கேக். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஸ்பெஷல் Plum கேக் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients) :
Fruits Mixture
Dry Grapes (உலர்ந்த திராட்சை) – 50 g
Tutti Frutti (டூட்டி ப்ரூட்டி) – 100 g
Black Dry Grapes (கருப்பு உலர் திராட்சை) – 50 g
Dry Fig (உலர் அத்தி) – 50 g
Almonds (பாதாம்) – 50 g
Pista (பிஸ்தா) – 50 g
Cashewnuts (முந்திரி) – 50 g
Dates (பேரிட்சை) – 50 g
Walnut (வால்நட் – 50 g
Butter (வெண்ணெய்) – 250 g
Sugar (சர்கரை) – 300 g
Egg (முட்டை) – 6 no’s
Maida (மைதா) – 200 g
Baking Powder (பேக்கிங் பவுடர்) – 10 g
Mix Fruit jam (மிக்ஸ் ப்ரூட் ஜாம்) – 50 g
Orange Juice (ஆரஞ் ஜீஸ்) – 250 ml
Spice Mix (ஸ்பைஸ் மிக்ஸ்) – 10 g each
(Dry Ginger Powder
Cardamon powder
Cinnamon powder
Nut make powder)
Cocoa Powder – 25 g
Oil (ஆயில்) – 25 ml
Special Plum Cake செய்முறை
- டிரை ப்ரூட்ஸ், டிரை நட்ஸ் அனைத்தையும் பொடி பொடியாக உடைத்து கொள்ளுங்கள், அதனை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். ஆரஞ்ச் ஜீஸில் 6-8 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். அபோதுதான் இதன் டேஸ்ட் இன்னும் அதிகமாக இருக்கும்.
- ஹோட்டலில் செய்யும் கேக்குகளில் செஃப் ரம், ஒயின், ப்ராண்டி மற்றும் விஸ்க்கியில் 60 நாட்கள் முன்பே ஊற வைப்பார்களாம். ஆனால் நாம் வீட்டில் அப்படி செய்ய முடியாது என்பதால் ஆரஞ்ச் ஜீஸ் பயன்படுத்துகிறோம்.
- பவுலில் பட்டரை எடுத்து கொள்ளுங்கள், நாட்டு சர்கரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின்னர் முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொண்டு, நன்றாக மொத்தமாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்போது ப்ரூட் ஜாம் சேர்த்து கொள்ளுங்கள்.
- இன்னொரு பவுலி மைதா எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் ஸ்பைஸ் பவுடர்கள் அனைத்தையும் கலந்து கொள்ளுங்கள். சிறிதளவு பேக்கிங் பவுடர் சேர்த்து கொண்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- பேக்கிங் பயுடர், பேக்கிங் சோடா பயன்படுத்தும் போது இன்னொரு liquid ingredients உடன் சேர்த்து கொள்ளலாம்.
- ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள முட்டை, நாட்டு சர்கரையுடன் இப்போது தயார் செய்த மைதா கலவையை சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக மிக்ஸ் செய்தவுடன் ஏற்கனவே ஊற வைத்துள்ள டிரை ப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை கலந்து கொள்ளுங்கள்.
- Cocoa powder கலருக்காக கலந்து கொள்ளுங்கள். அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்த பிறகு ஆயில் சேர்த்து கொள்ளுங்கள்.
- இன்னும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள், கேக் மோல்டின் மீது ஷீட் போட்டு பட்டர் தடவி கொள்ளுங்கள். இப்போது ரெடி செய்த பேட்டரை மோல்டில் போட்டு சமன் படுத்தி கொள்ளுங்கள்.
- OTG யில் 180 டிகிரி செல்சியஸில் 10 நிமிடம் வைத்து ஹீட் செய்த பிறகு கேக் பேட்டரை வைத்து 180 டிகி செல்சியஸில் 90 நிமிடங்கள் குக் செய்ய வேண்டும்.
- 10 நிமிடம் கழித்து திறந்து டீமோல்ட் செய்தால் சுவையான Plum cake ரெடி. இந்த கேக் நாளாக இன்னும் டேஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும்.