உடற்பயிற்சியின் போது பெண்கள் வெயிட் ட்ரைனிங் (Weight Training) செய்யலாமா? கூடாதா? நான் உங்கள் பிட்னஸ் கோச் Biglee முரளி, இந்த பதிவில் பெண்கள் வெயிட் ட்ரைனிங் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இதற்கு பதில் தேடும் முன், நம் உடலின் அமைப்பு மற்றும் ஹார்மோன் குறித்து தெரிந்து கொள்வது முக்கியம். பெண்கள், ஆண்கள் இருவருக்குமே உடலில் 207 எழும்புகள் தான், ஒரு எழும்பு மட்டுமே மாறுபடும். பெண்கள் பிரசிவிப்பதால் அவர்களது இடுப்பு பகுதி எழும்பு ஆண்களை விட வித்தியாசமாக இருக்கும். இதனால் அவர்களது உடல்வாகு ஆண்களை விட வேறுபடும்.
ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மற்றும் பெண்களிடம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும். இருவருக்குமே இரண்டு ஹார்மோன்களும் இருக்கும். உதாரணமாக, ஒரு ஆணுக்கு 5 டெஸ்டோஸ்டிரோன் இருந்தால் 1 ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருக்கும். பெண்ணுக்கு 5 ஈஸ்ட்ரோஜன் இருந்தால் 1 டெஸ்டோஸ்டிரோன் இருக்கும்.
டெஸ்டோஸ்டிரோன் உங்களது Strength மற்றும் Muscle Density அதிகரிக்க உதவும். பெண்களிடம் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இடுப்பு மற்றும் பால் சுரப்பிகளில் அதிக கொழுப்பை சேர்க்கும். அதனால்தான் பெண்கள் ஆண்களை விட எடை அதிகரிக்கின்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்களின் ஹார்மோன்கள் குறித்து பார்த்தோம். இனி வெயிட் ட்ரைனிங்கின் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம். பெண்கள் ஒல்லியாக இருக்க என்று சொன்னால் ஆகும் சந்தோஷத்தை விட ஷேப் நல்லா இருக்குன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அந்த ஷேப் வாக்கிங் போறதால கிடைக்காது. வெயிட் ட்ரைனிங்தான் உதவும்.
பெண்கள் Muscles ஸ்ட்ராங்கா மெயிண்டெய்ன் பண்ணீங்கன்னா உங்க ஜாயின்ஸ்ல தேய்மானம் கம்மியா இருக்கும். கார்டியோ மற்றும் டயட்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெயிட் ட்ரைனிங்கும் செய்தால் உங்களது ஷேப் நன்றாக இருக்கும். நான் முன்பு சொன்னது போல் ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் ஆண்களை போல் உடம்பு வராது, அதை யோசிக்க வேண்டாம்.
ஆண்களை போல் உடலமைப்புடன் நிறைய பெண்கள் இருக்கிறார்களே என்று கேட்டால் அவர்கள் ஹார்மோன மாற்றுவதற்கு வழிசெய்து கொண்டார்கள். அதனால் பெண்கள் வெயிட் ட்ரைனிங் செய்யலாம், நல்ல உடலமைப்புடன் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கலாம்.