சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இளநீர் குடிக்கலாமா?

Reading Time: < 1 minutes

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. அது குறித்த விளக்கங்களை பார்க்கலாம்.

சர்க்கரை வியாதி வந்துவிட்டால் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என பல்வேறு கேள்விகள் நம் மூளைக்குள் ஓட ஆரம்பித்துவிடும். பொதுவாக இளநீர் உடலுக்கு நல்லது என்றாலும், சர்க்கரை வியாதி இருப்பவர்கள் அதை குடிக்கலாமா? வேண்டாமா என்ற குழப்பம் நிச்சயம் இருக்கும்.

100 கிராம் இளநீரில் தோராயமாக, சர்க்கரை 6.23 கிராம், கார்போஹைட்ரேட் 15.2 கிராம், நார்சத்து 9 கிராம், கொழுப்பு சத்து 33. 5 கிராம், புரத சத்து 3.33 கிராம் , 354 கலோரிகள் உள்ளது.

சோடியம் 20 மில்லி கிராம், பொட்டாஷியம் 356 கிராம் இருக்கிறது. குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்சத்து எப்போதும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதுதான். இளநீரிக்குள்ளே இருக்கும் வெள்ளை சதையில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இதில் குறைந்த கார்போஹைட்ரேட் இருக்கிறது.


சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் எக்ட்ரோலைட்ஸ் (electrolytes) அளவு குறையும். இளநீரில் எக்ட்ரோலைட்ஸ் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் நன்மை தரும்.


இளநீரில் இருக்கும் எலக்ட்ரோலைட் சர்க்கரை நோயாளிகள், தண்ணீர் வரட்சியால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும். மேலும் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் தடுக்கிறது. இளநீரில் குறைந்த சர்க்கரைதான் இருக்கிறது. ஆதலால் சர்க்காரை நோயாளிகள் நம்பி குடிக்கலாம்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: