ஷான் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படம் குறித்து பார்க்கலாம்.

கதை
தேநீர் கடை தொழிலாளியான கதாநாயகன், தனது மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு தருணத்தில் அவரது மகள் பாலிகள் வன்புணர்வுக்கு ஆளாகிறார்.தனது மகளுக்கு நடந்த கொடுமையின் துயரை மனதில் புதைத்துக்கொள்ளும் நாயகன், ஒரு கட்டத்தில் கொதித்து எழுகிறார். பின்னர் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
விமர்சனம்
‘பொம்மை நாயகி’ இந்த படத்தை இயக்கியுள்ளார் ஷான். இயக்குநர் பா.ரஞ்சித் இந்த படத்தை தயாரித்துள்ளார், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு ஒரு அநீதி நடந்து அவர்கள் போராடினால் இந்த சமுதாயத்தில் என்ன நடக்குமோ அதனை படமாக எடுத்துள்ளனர்.
’மண்டேலா’ போன்று ஒரு அழுத்தமான கதை யோகி பாபுவிற்கு இந்த படத்தில். யோகி பாபுவின் நடிப்பு இந்த படத்தில் நன்றாக இருந்தது வழக்கமான காமெடிகள் இல்லாமல் கதையை தாங்கி நடித்துள்ளார். சில எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது.
அவரது மனைவியாக நடித்திருந்த சுபத்ரா, தன் மகளுக்கு இப்படி ஒரு அநீதி நிகழ்ந்தால் ஒரு தாய் எப்படி துடிப்பால் என்பதை கண் முன் கொண்டு வந்தார், அற்புதமான நடிப்பு. யோகி பாபுவின் மகளாக நடித்துள்ள அந்த பெண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட்சிகளில் ஆழத்தை தன் நடிப்பால் இன்னும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது அவரது நடிப்பு. மற்ற அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இசை, ஒளிப்பதிவு என அனைத்து துறைகளும் நல்ல பங்களிப்பை கொடுத்துள்ளனர். முதல் அரை மணி நேரம் அந்த கதை ஸ்டார்ட் ஆகும் வரை ஸ்லோவாக தான் நகர்கிறது. கொஞ்சம் கனெக்ட் படத்தில் மிஸ் ஆவதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். நிறைய கதாபாத்திரங்கள் படத்திற்கு சப்போர் கொடுக்கவும் இல்லை, அவை எழுதப்பட்ட விதமும் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
மொத்தமாக படம் எப்படி இருக்கு என்று கேட்டால் நல்ல அழுத்தமான கதைக்களம் ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.
இணைய தலைமுறை ரேட்டிங்: 2.5/5