விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டிச்சென்ற அசீம். அதிர்ச்சியில் விக்ரமன், ஷிவின் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று. வீட்டில் மொத்தம் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் உட்பட 3 பேர் இருந்தனர். இன்று ஒளிபரப்பான இறுதி நாளில் கமல்ஹாசன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிவித்து உள்ளார். அதனை கேட்டு மற்றவர்களின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பார்வையாளர்களில் பெரும்பானோர் விக்ரமன் அல்லது ஷிவினுக்கு இந்த டைட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்றுள்ளார் போட்டியாளர் அசீம். இதனை அசீம் ரசிககள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விக்ரமன் மற்றும் ஷிவின் ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது.
அசீம் தொடர்ந்து அனைவரையும் மரியாதை குறைவாக பேசி வந்ததாக டொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்களால் குற்றம் சாட்டப்பட்டது. கமல்ஹாசனும் நிறைய முறை அவரை கண்டித்து இருந்தார். மன்னிப்பு கேட்டு பின்பு அதை செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார் அசீம். ஆனால் ஹவுஸ் மேட்களுக்கு மிகவும் ஸ்டராங்கான போட்டியாளராக மாறியிருந்தார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து அதிக ஓட்டுக்களை பெற்று அவர் டைட்டிலை வென்றார். விக்ரமன் ரன்னர் ஆகவும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். அசீம் 36.2 கோடி ஓட்டு வாங்கி முதலிடத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விக்ரமன் 35. 09 கோடி பெற்றிருப்பதாகவும், மூன்றாவது இடத்தில் ஷிவின் 25.09 கோடி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.