அமேசான் OTT யில் உள்ள Top 20 Horror/ Thriller படங்களின் வரிசையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
20. Wrong Turn: The Foundation (2021)

IMDB Rating: 5.5/10
இந்த பாகமும் முந்தைய Wrong Turn படங்களின் தொடர்ச்சியே. பார்க்கவே கொடுரமாக இருக்கும் மனிதர்கள் அங்கு வரும் மக்களை கொடுரமான முறையில் கொலை செய்வார்கள். இந்த படத்தில் நிறைய பயங்கரமான கோர காட்சிகள் வரும். இந்த படம் பிரைமில் தமிழ் மொழியில் உள்ளது.
19. The Taking of Deborah Logan

IMDB Rating: 6/10
‘தி டேக்கிங் ஆஃப் டெபோரா லோகன்’ 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் திரைப்படம். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட வயதான மூதாட்டியை பேட்டி எடுக்க ஒரு குழு வருகிறது. அங்கு நடக்கும் அசம்பாவித நிகழ்வுகளை கொண்டதே இந்த படம்.
18. Breaking Surface

IMDB Rating: 6.2/10
2020ம் அண்டு வெளியான நார்வே சர்வைவல் த்ரில்லர் “பிரேக்கிங் சர்ஃபேஷ்”. டைவிங் செல்ல கடலுக்கு செல்லும் இரண்டு சகோதரிகள். அங்கு ஏற்படும் விபத்தில் ஒரு சகோதரி மாட்டிக்கொள்ள இன்னொரு சகோதரி ஹீரோயின் அவரை காப்பாற்றினாறா என்பதே கதை. மிகவும் என்கேஜிங்கான சர்வைவல் த்ரில்லர் படம்.
17. Malignant

IMDB Rating: 6.2/10
ஜேம்ஸ் வான் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் மூவியாக வெளியானது “Malignant”. நகரில் நடக்கும் பல கொலைகள் கதாநாயகி உணர்கிறார். ஏன் அப்படி ஏற்பட்டது? என்பது போன்ற மர்மங்கள் நிறைந்த படம். படத்தின் கிளைமேக்ஸில் வரும் ஆக்ஸன் காட்சி செமயாக படமாக்கி இருப்பார்கள்.
16. Lights Out

IMDB Rating: 6.3/10
2016ம் ஆண்டு வெளியான ஹாரர் படம் “லைட்ஸ் அவுட்”. ஹாரர் ரசிகர்களாக இருந்தால் உங்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கலாம். இரவில் லைட்டை அணைத்து விட்டு இந்த படத்தை பாருங்கள். செமயாக ஹாரரை என்ஜாய் பண்ணலாம்.
15. X (2022)

IMDB Rating: 6.6/10
ஆபாச படம் எடுக்க ஒரு கும்பல் ஒரு கிராமத்தில் தனி வீட்டை வாடகைக்கு எடுக்கிறது. அங்கு ஒரு வயதான தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஆபாச படம் எடுக்க வந்தவர்களில் ஒவ்வொருவராக இறக்க கடைசியில் என்ன நடந்தது என்பதே கதை. நிறைய ஆபாச காட்சிகள் இருக்கும் குடும்பத்துடன் பார்க்க முடியாது.
14. It Follows

IMDB Rating: 6.8/10
2015ம் ஆண்டு வெளியான ஹாரர் த்ரில்லர் மூவி It Follows. ஒரு சாபத்தால் மாறி மாறி இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். இதில் மாட்டிக்கொள்ளும் ஹீரோயின் கடைசியில் எப்படி தப்பித்தார் என்பதே கதை.
13. The Babadook

IMDB Rating: 6.8/10
இது ஒரு வித்தியாசமான ஹாரர் மூவி. தனது மகனுக்காக தினமும் புக் படிக்கும் ஹீரோயின். ஒரு நாள் தி பாபாடூக் என்ற புக்கை படிக்கிறார். பிறகு நடந்த அமானுஸ்ய சம்பவங்களே மீதிபடம்.
12. The Witch

IMDB Rating: 6.9/10
2015ம் ஆண்டு வெளியான டார்க் ஸ்லோ பர்னர் ஹாரர். காட்டுக்கு ஒதுக்குப்புறமாக வாழும் ஒரு குடும்பம். அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்து போக ஏன்? என்ன காரணம் என்று ஹீரோயின் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை. ஸ்லோ பர்னிங் ஹாரர் ரசிகர்களுக்கு இந்த படம் மனதில் நிற்க வாய்ப்பு உள்ளது.
11. The Black Phone

IMDB Rating: 6.9/10
1978ல் நடப்பது போன்ற கதைக்களம். குழந்தைகளை கடத்தும் ஒரு நபர். படத்தின் கதாநாயகனான சிறுவனும் அவனால் கடத்தப்படுகிறான். அந்த சிறுவன் தப்பித்தானா? என்ன நடந்தது என்பதே கதை.
10. Orphan

IMDB Rating: 7/10
குழந்தை இறந்ததால் தம்பதி ஒரு சிறிய பெண்ணை தத்தெடுத்துக்கின்றனர். அந்த சிறுமி வீட்டுக்குள் வந்து சில நாட்கள் அந்த குடும்பம் மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு அந்த சிறுமி பற்றி தெரிய வர கடைசியில் அந்த சிறுமி யார் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. இந்த படம் மிகவும் த்ரில்லாக இருக்கும். த்ரில்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
9. Hereditary

IMDB Rating: 7.3/10
2018ம் ஆண்டு வெளியான ஸ்லோ பர்னிங் ஹாரர் டிராமா “Hereditary”. ஒரு குடும்பத்தில் உள்ள வயதான ஒருவர் இறந்துவிடுகிறார். அவர் இறப்பிற்கு பின் அவரது மகள் குடும்பத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இந்த படத்தின் கதை. இது ஸ்லோ பர்னிங் ஹாரர் மூவி கடைசி 10 நிமிடத்தில் தான் இந்த படத்தின் மொத்த கதையும் நமக்கு தெரியும்.
8. The Conjuring 2

IMDB Rating: 7.3/10
தி கான்ஜுரிங் படத்தின் 2வது பாகம் முதல் பாகம் போலவே நிறைய பயங்கரமான த்ரில்லர் காட்சிகளை கொண்ட திரைப்படம்.
7. IT

IMDB Rating: 7.3/10
ஜோக்கர் போல வேடம் அணிந்த ஒருவன் நகரில் இருக்கும் குழந்தைகளை கொலை செய்து வருகிறார். அவனிடம் மாட்டி கொள்ளும் சிறுவர்கள். தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை. இந்த படத்தில் பலூன் பறந்து வரும்போது எல்லாம் நமக்கும் பயம் ஏற்படும். அந்த வகையில் செம த்ரில்லிங்காக படம் இருக்கும்.
6. Split

IMDB Rating: 7.3/10
ஸ்பிளிட் பர்ஸ்னாலிட்டி நோய் உடைய கதாநாயகன், அவனுக்குள் மொத்தம் 23 பேர். 3 பெண்களை அடைத்து வைத்திருக்கிறான். அவனது 24வது பர்ஸ்னாலிட்டி வெளியானால் இன்னும் மோசமாக மாறுவான் என்ற நிலையில். 24வது பர்ஸ்னாலிட்டி வெளிப்பட்டதா? என்ன நடந்தது என்பதே கதை.
5. Texas Chainsaw

IMDB Rating: 7.4/10
மாஸ்க் போட்டோ ஒரு சைக்கோ கில்லர் அங்கு வரும் நபர்களை கொடூரமாக கொலை செய்கிறான். அங்கு செல்லும் ஒரு கும்பல். அவர்களில் யார் தப்பித்தது? மாஸ்க் போட்டிருந்த சைக்கோவை கொன்றார்களா என்பதே மொத்த கதை. இந்த படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கும். கொடூரமான முறையில் காட்சிகளை எடுத்திருப்பார்கள்.
4. The Wailing

IMDB Rating: 7.4/10
2016ம் ஆண்டு வெளியான கொரியன் ஹாரர் “தி வெயிலிங்”. நோயால் தாக்கப்படும் கிராம மக்கள். இதனை கண்டுபிடிக்க களமிறங்கும் பயந்த போலீஸ். ஆரம்பத்தில் சாதாரணமாக இந்த விஷயத்தை கையாளும் அவர் தன் மகளுக்கும் அந்த நோய் வர இன்னும் அது குறித்து தீவிரமாக களமிறங்குகிறார். கடைசியில் என்ன அமானுஷ்யங்கள் நடந்தது என்பதே கதை.
3. A Quiet Place

IMDB Rating: 7.5/10
சத்தம் கேட்டால் மனிதர்களை தாக்கும் மிருகம். மொத்த நாடே அதன் தாக்குதலில் இறந்து போக. ஒரு சிலர் மட்டும் மறைந்து சத்தமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அந்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒரு குடும்பம். தப்பித்தார்களா என்பதே படத்தின் கதை. மிகவும் பதை பதைப்பை ஏற்படுத்தும் திரைப்படம்.
2. Train To Busan

IMDB Rating: 7.6/10
கொரியன் சினிமாவில் வெளியான தி பெஸ்ட் ஹாரர் மூவி “டிரைன் டூ பூசன்”. ஊரில் அனைவரும் ஜாம்பி நோயால் தாக்கப்பட, அந்த நேரத்தில் டிரைனில் பயணம் செய்யும் மக்கள். இந்த சூழ்நிலையில் ஹீரோ தனது மகளை எப்படி காப்பாற்றினார் என்பதே கதை. மிகவும் எமோஷ்னலான ஹாரர் திரைப்படம் அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
1. Tumbadd

IMDB Rating: 8.2/10
இந்த பட்டியலில் முதலிடத்தின் நம் இந்திய சினிமா “Tumbadd”. பேராசையின் விளைவை வித்தியாசமான கதைகளத்தால் சொல்லியிருப்பார்கள். ஹஸ்தர் என்ற சபிக்கப்பட்ட கடவுளிடம் இருந்து செல்வங்களை திருட முயற்சிக்கும் ஹீரோ. அதனால் என்ன நடந்தது? என்பதே முழுக்கதை. பாலிவுட்டில் வெளியான இந்த படம் தமிழ் டப்பிங்கிலும் இருக்கு மிஸ் பண்ணாம பாருங்கள்.