வாரம் தோறும் OTT யில் உள்ள சிறந்த திரைப்படங்களை உங்களுக்காக ஷேர் செய்கிறோம், அதே போல் இந்த வார இறுதியில் நீங்கள் பார்க்க Aha OTT-யில் உள்ள சிறந்த தமிழ் திரைப்படங்கள் குறித்த தொகுப்பை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜீவி – 2

இயக்குநர் கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜீவி’. அதன் இரண்டாவது பாகம் இந்த படம். தொடர்பியல் விதியும், முக்கோண விதியும் விடாது தொடர்ந்து ஒருவனது வாழ்க்கையில் ஆடும் ஆட்டம் தான் ‘ஜீவி 2’. இந்த படத்தின் முதல் பாகம் அமேசான் தளத்தில் உள்ளது. இரண்டாவது பாகம் ஆஹா OOTயில் உள்ளது.
பயணிகள் கவனிக்கவும்

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் விதார்த், லக்ஷ்மி நடிப்பில் வெளியான திரைப்படம் “பயணிகள் கவனிக்கவும்”. சமூக வலைத்தள பக்கத்தை நாம் செய்யும் செயல் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கி, அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும், அதனை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருப்பார்கள்.
சில நேரங்களில் சில மனிதர்கள்

நாசர், அசோக் செல்வன், மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்’. இந்த படம் வெவ்வேறு வாழ்வியல் சூழலில் உள்ளவர்களை ஒரு புள்ளியில் இணைக்க முயல்கிறது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படம் இது. முதல் பாதி ஸ்லோவாக இருந்தாலும் இரண்டாம் பாதி நல்ல எமோசனுடனே நகர்கிறது.
உறியடி

விஜய குமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் “உறியடி”. ரிலீசான சமயத்தில் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’.
விடியும் முன்

ரேகா எனும் விலைமாதுவுடன் பெரிய இடத்து கஸ்டமருக்கு சின்னப் பெண் தேவையென அனுப்பி வைக்கப் படுகிறாள் சிறுமி ஒருவள். ஆனால் அங்கே ஒர் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. அதன் தொடர்பாக அங்கிருந்து ரேகாவும், சின்னப் பெண் நந்தினியும் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை துரத்தும் கும்பல், தப்பினார்களா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ். நடிகை பூஜா ரேகாவாக நடித்திருப்பார். இந்த படத்தின் திரைக்கதை நம்மை சீட் நுணியில் உட்கார வைத்திருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
ரைட்டர்

போலீசில் சீனியர் ரைட்டராக இருக்கும் சமுத்திரக்கனி, போலீசுக்கு என ஒரு சங்கம் அமைக்க முயற்சி செய்கிறார். இது பிடிக்காத சில போலீஸ் அதிகாரிகள், அவரை வேறு ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்கின்றனர். வந்த இடத்தில் சமுத்திரக்கனி, அப்பாவி கைதிக்கு பாரா டூட்டி பார்க்கிறார். அப்போது சமுத்திரக்கனி உதவியுடன் தேசத் துரோக வழக்கில் அந்த கைதி சிக்க வைக்கப்படுகிறார். இதை அறிந்த சமுத்திரக்கனி குற்ற உணர்ச்சியால் ஹரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா, இல்லையா? என்பதே ‘ரைட்டர்’ படத்தின் முழுக்கதை.
மாமனிதன்

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான திரைப்படம் “மாமனிதன்”. தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களும், போராட்டமுமே படத்தின் கதை. மிகவும் எதார்த்தமான திரைப்படம் கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியை கொடுக்கும்.
மன்மத லீலை

வெங்கட் பிரபு இயக்கத்தில் அச்சொக் செல்வன் நடிப்பில் வெளியான திரைப்படம் “மன்மத லீலை”. பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்து அதன்மூலம் தொழிலதிபராக உயர்கிறார் நாயகன். அவர், திருமணத்துக்கு முன்னும் பின்னும் இருவேறு பெண்களுடன் நெருக்கமாக ஓர் இரவைக் கழிக்கிறார். அந்த இரவுகள் விடியும்போது ஒரு பிரச்சினை வருகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதே மீதிக்கதை.
மிரள்

அறிமுக இயக்குநர் சக்தி வேல் இயக்கத்தில், பரத், வாணி போஜன் நடிப்பில் வெளியான ஹாரர் ஸ்லாசர் திரைப்படம் “மிரள்”.குடும்பத்துடன் சொந்த ஊரிலிருந்து காரில் திரும்பும் நாயகன் அமானுஷ்ய சக்திகளுடன் நடுவழியில் சிக்கித்தவித்தால் என்னவாகும்? இதுதான் `மிரள்’ படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
டைரி

மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் வழியில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் அதித விபத்துகள் நடைபெறுகின்றன. அதையொட்டி பல மர்மக் கதைகளும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த வழக்குகள் பயிற்சி காவலரான அருள்நிதி கைக்கு வந்து சேர, அவர் இது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார். பல திருப்பங்களைக் கொண்ட இந்த வழக்கில் இறுதியில் என்ன நடந்தது என்பது தான் ‘டைரி’ கதை.
சர்தார்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்ப்டம் “சர்தார்”.விளம்பரப் பிரியரான காவல்துறை அதிகாரி கார்த்தி, உளவுத்துறையின் முக்கிய ஃபைலை திருடியதாக சமூக ஆர்வலர் சமீரா தாமஸை தேடி செல்கிறார். அதைப் பின் தொடரும்போதுதான், தண்ணீர் மாஃபியா, தேசத்துரோகி என முத்திரைக் குத்தப்பட்ட தன் தந்தை ‘சர்தார்’ யார் என்பது உள்பட பல விஷயங்கள் அவருக்குத் தெரிய வருகிறது. பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதுதான், படம். மிகவும் இண்ட்ரஸ்டிங்கான திரைப்படம் மிஸ் பண்ணாமல் பார்த்து ரசியுங்கள்.