மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான சிறந்த படங்களின் பார்ட்-2 லிஸ்ட்டை இந்த தொகுப்பில் காணலாம்.

22 Female Kottayam (2012)

IMDB Rating: 7.4/10
Available in: Sun NXT
Genre: Thriller
22 Female Kottayam மலையாளத்தில் வெளியான த்ரில்லர் வகை திரைப்படம். இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆஷிக் அபு இயக்கியிருக்கு இந்த படம் த்ரில்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வாய்ப்பு உள்ளது. சன் நெக்ஸ்ட் ஓடிடி-யில் மலையாள மொழியில் உள்ளது.
Artist (2013)

IMDB Rating: 7.1/10
Available in: Amazon Prime Video
Genre: Drama
2013ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் Artist. பரிதோஷ் உத்தம் எழுதிய ட்ரீம்ஸ் இன் பிரஷ்யன் ப்ளூ நாவலின் தழுவல் இந்த படம். கதையின் நாயகனும், நாயகியும் ஓவியர்கள். இருவருக்கும் தனித்தனி ஆசைகள் இருந்தும் அவர்கள் ஒருவொரை ஒருவர் காதலிக்கின்றனர் பிறகு அவர்கள் உறவு எப்படி இருந்தது, இருவரும் தங்கள் துறையில் ஜெயித்தார்களா? என்பதே முழுக்கதை. பகத் பாசில் உடன் அன் அகஸ்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்யாம் பிரசாத் இயக்கியுள்ளார். அமேசான் பிரைமில் இந்த படம் உள்ளது, நல்ல பீல் குட் மூவி.
Annayum rasoolum (2013)

IMDB Rating: 7.4/10
Available in: Hotstar
Genre: Romance/ Drama
ராஜிவ் ரவி இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் ஆண்டிரியா நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான “Annayum rasoolum” டாக்ஸி ஓட்டுநரான ரசூலும், சேல்ஸ் கேர்ள் அன்னாவும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். அன்னாவின் அக்கா ரசூலை கிறிஸ்தவத்திற்கு மாற வற்புறுத்துகிறார்,கடைசியில் அவர்கள் சேர்ந்தார்களா? ரசூல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாரா என்பதே முழுக்கதை. இந்த படத்தை மிஸ் பண்ணாமல் கண்டிப்பாக பாருங்கள். உலக சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
Kerala Cafe (2009)


IMDB Rating: 7.4/10
Available in: Hotstar
Genre: Drama, Comedy
லால் ஜோஸ், ஷாஜி கைலாஸ், அன்வர் ரஷீத், ஷியாமாபிரசாத், பி.உன்னிகிருஷ்ணன், ரேவதி, அஞ்சலி மேனன், எம்.பத்மகுமார், சங்கர் ராமகிருஷ்ணன் மற்றும் உதய் அனந்தன் உள்ளிட்ட பத்து இயக்குனர்கள் இணைந்து 2009 ஆம் ஆண்டு வெளியான ஆந்தாலஜி திரைப்படம் ‘Kerala cafe’. இதில் பகத் பாசில் நடிப்பில் ‘Mrityunjayam ’ என்ற திருப்பங்கள் நிறைந்த ஒரு கதையில் நடித்திருப்பார்.
Amen (2013)

IMDB Rating: 7.8/10
Available in: Sun NXT
Genre: Drama, Romance
Amen 2013ம் ஆண்டு வெளியான மலையாள நகைச்சுவைத் திரைப்படமாகும், இந்த படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார், ஃபஹத் பாசில், இந்திரஜித் சுகுமாரன், கலாபவன் மணி, சுவாதி ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
Bangalore Days (2014)

IMDB Rating: 8.3/10
Available in: Hotstar
Genre: Drama, Romance
2014 ம் ஆண்டு அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, பகத் பாசில், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பெங்களூர் டேஸ்’. இந்த படம் தமிழிழும் ஆர்யா, பாபி சிம்ஹா நடிப்பில் பெங்களூர் நாட்கள் என்று வெளியானது. ஆனால் மலையாளம் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதுவரை பார்க்காதவர்கள் மலையாளத்தில் இந்த படத்தை பாருங்கள்.